டிரம்ப் வீடியோ பதிவு நீக்கம் பேஸ்புக் நிர்வாகம் அதிரடி

தினகரன்  தினகரன்
டிரம்ப் வீடியோ பதிவு நீக்கம் பேஸ்புக் நிர்வாகம் அதிரடி

அமெரிக்க அதிபர் டிரம்ப் தனியார் தொலைக்காட்சிக்கு அளித்த பேட்டியில், `குழந்தைகள் இயல்பாகவே நோய் எதிர்ப்பு சக்தி மிக்கவர்கள். எனவே, கொரோனா தொற்றினால் அவர்கள் பாதிக்கப்பட வாய்ப்பு குறைவு. அவர்கள் நோயை பரப்ப மாட்டார்கள்,’ என்று கூறியிருந்தார். இந்த வீடியோ டிரம்பின் தேர்தல் பிரசார குழுவினரால் பேஸ்புக்கில் பதிவேற்றம் செய்யப்பட்டது. ஆனால், `இது முற்றிலும் தவறானது. தவறான தகவல் பதிவு வழிகாட்டு நெறிமுறைகளுக்கு எதிரானது,’ என்று கூறி பேஸ்புக் நிறுவனம் இப்பதிவை நேற்று அதிரடியாக நீக்கியது. டிரம்ப்பின் பதிவை பேஸ்புக் நீக்கி இருப்பது இதுவே முதல்முறை. ஆனால், டிவிட்டர் நிறுவனம் அவருடைய பதிவை பலமுறை நீக்கி, சர்ச்சையை ஏற்படுத்தி இருக்கிறது.

மூலக்கதை