லெபனானில் பயங்கர வெடி விபத்து பலி எண்ணிக்கை 135 ஆக உயர்வு

தினமலர்  தினமலர்
லெபனானில் பயங்கர வெடி விபத்து பலி எண்ணிக்கை 135 ஆக உயர்வு

பெய்ரூட்; லெபனான் தலைநகர் பெய்ரூட்டில் நடந்த வெடி விபத்தில் பலியானவர்கள் எண்ணிக்கை, 135 ஆக உயர்ந்துள்ளது.

மேற்காசிய நாடான லெபனான் தலைநகர் பெய்ரூட்டில், 4ம் தேதி மாலை, துறைமுகக் கிடங்கில் ஆறு ஆண்டுகளாக வைக்கப்பட்டிருந்த, 27.5 லட்சம் கிலோ அம்மோனியம் நைட்ரேட் மருந்து வெடித்தது. ரூ. 2,600 கோடிஇந்த வெடி விபத்து, பெய்ரூட் நகரையே உருக்குலைய செய்துள்ளது. பல கட்டடங்கள் இடிந்து தரைமட்டமாயின.

இந்த விபத்துக்கு, 70 பேர் பலியானதாகவும், 3,000 பேர் காயம் அடைந்துள்ளதாகவும், லெபனான் அரசு வட்டாரங்கள், நேற்று முன்தினம் தெரிவித்தன.இந்நிலையில், விபத்தில் காயம் அடைந்த பலர் இறந்ததையடுத்து, பலி எண்ணிக்கை, 135 ஆக அதிகரித்துள்ளது. காயம் அடைந்தவர்களின் எண்ணிக்கை, 5,000த்தை கடந்துள்ளது.கட்டட இடிபாடுகளில் சிக்கியவர்களை மீட்கும் பணி தொடர்ந்து நடக்கிறது. இந்த வெடி விபத்தில், தீயணைப்பு வீரர்கள் உட்பட பலர் மாயமாகி இருப்பதாக, லெபனான் அரசு தெரிவித்துள்ளது. பெய்ரூட் துறைமுகத்தில் ஏற்பட்ட வெடி விபத்து காரணமாக, மூன்று லட்சத்துக்கும் அதிகமானோர் வீடுகளை இழந்துள்ளனர; 2,600 கோடி ரூபாய்க்கு மேல் சேதம் ஏற்பட்டுள்ளதாக, லெபனான் அரசு வட்டாரங்கள் தெரிவித்தன.மருத்துவ உதவிவிபத்தில் மருத்துவமனைகளும் சேதமடைந்துள்ளதால், காயம் அடைந்த பலர், வேறு நகரங்களில் உள்ள மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இவர்களில் பலரது நிலைமை கவலைக்கிடமாக உள்ளதால், பலி எண்ணிக்கை மேலும் அதிகரிக்கும் என, அஞ்சப்படுகிறது.லெபனான் ஏற்கெனவே, பெரும் பொருளாதாரச் சரிவைச் சந்தித்துள்ளது. இந்த வெடி விபத்து, லெபனான் பொருளாதாரத்தை மேலும் பாதித்துள்ளது. இதையடுத்து, கத்தார் உள்ளிட்ட அரபு நாடுகள், லெபனானுக்கு மருத்துவ உதவிகளை வழங்கியுள்ளன.

மூலக்கதை