இனி 'இ-பாஸ்' முறை தேவையில்லை: ஸ்டாலின்

தினமலர்  தினமலர்
இனி இபாஸ் முறை தேவையில்லை: ஸ்டாலின்

சென்னை : 'மக்களை இன்னல்படுத்தும் இ - பாஸ் முறை இனி தேவையில்லை' என தி.மு.க. தலைவர் ஸ்டாலின் கூறியுள்ளார்.

அவரது அறிக்கை: திருமணம், அவசர மருத்துவ சிகிச்சை, இறப்பு உள்ளிட்ட அவசர தேவைகளுக்கு மட்டும் மாவட்டம் விட்டு மாவட்டம் செல்ல 'இ - பாஸ்' வழங்கப்படுகிறது. இருப்பினும் இந்த அவசரங்களுக்காக 'இ - பாஸ்' விண்ணப்பித்தாலும் பலமுறை நிராகரிக்கப்படுகிறது.

சென்னையில் 5000; 10 ஆயிரம் ரூபாய் வாங்கிக் கொண்டு போலி பாஸ் வழங்கப்படுகிறது. இந்த ஊழல் முறைகேடு பற்றிய தலைப்பு செய்தியை அ.தி.மு.க. அரசு அலட்டிக் கொள்ளவில்லை. மக்களின் உணர்வுகளை மதித்து மாவட்டங்களுக்கு இடையே பயணிப்பதற்கான இ-பாஸ் வழங்கும் நடைமுறையை உடனே ரத்து செய்ய வேண்டும். இவ்வாறு கூறியுள்ளார்.

'கடைசி யுத்தம்': திமுக புத்தகம்

'கலைஞரின் கடைசி யுத்தம்' என்ற புத்தகத்தை, தி.மு.க., தலைவர் ஸ்டாலின், நேற்று வெளியிட்டார். கருணாநிதி மறைந்ததும், சென்னை, மெரினா கடற்கரையில், அவர் உடலை அடக்கம் செய்ய இடம் கேட்டு, தொடரப்பட்ட வழக்கை மையமாக வைத்து, 'கலைஞரின் கடைசி யுத்தம்' என்ற புத்தகம் எழுதப்பட்டு உள்ளது. இப்புத்தகத்தை ஸ்டாலின், நேற்று வெளியிட்டார். தி.மு.க., முதன்மை செயலர் கே.என்.நேரு, செய்தித் தொடர்பாளர் டி.கே.எஸ்.இளங்கோவன், ராஜ்யசபா எம்.பி.,கள் வில்சன், என்.ஆர்.இளங்கோ, தலைமை நிலைய செயலர்கள் துறைமுகம் காஜா, பூச்சி முருகன் ஆகியோர் பெற்றுக் கொண்டனர்.

மூலக்கதை