கேரளாவில் ஒரே நாளில் 800 பேர் கொரோனாவிலிருந்து குணமடைந்தனர்

தினமலர்  தினமலர்
கேரளாவில் ஒரே நாளில் 800 பேர் கொரோனாவிலிருந்து குணமடைந்தனர்

திருவனந்தபுரம்: கேரளாவில் கடந்த 24 மணி நேரத்தில் மேலும் 800 பேர் கொரோனாவிலிருந்து குணமடைந்து வீடு திரும்பினர்.

இதையடுத்து கொரோனாவாலிருந்து குணமடைந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 18,300 ஆக உள்ளது. இதன் படி மாநிலத்தில் கொரோனாவிலிருந்து மீண்டவர்களின் விகிதம் 60.40 சதவீதமாக உள்ளது.

இருப்பினும் அங்கு ஒரே நாளில் மேலும் 1,298 பேர் கொரோனா தொற்றால் பாதிப்பு அடைந்தனர். இதையடுத்து அங்கு கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 30,343 ஆனது. ஒரே நாளில் மேலும் 3 பேர் கொரோனாவுக்கு பலியானதைத் தொடர்ந்து கொரோனா பலி எண்ணிக்கை 97 ஆக உயர்ந்தது.

நேற்று (ஆக.,6) பாதிப்பு அடைந்தவர்களில் 78 பேர் வெளிநாடுகளில் இருந்தும், 170 பேர் வெளிமாநிலங்களில் இருந்தும் வந்துள்ளனர். 1,017 பேர் கொரோனா பாதிக்கப்பட்டவர்கள் மூலமாக பாதிக்கப்பட்டனர். 76 பேருக்கு யார் மூலமாக தொற்று ஏற்பட்டது என்று கண்டுபிடிக்க முடியவில்லை.

அதிகபட்சமாக திருவவனந்தபுரம் மாவட்டத்தில் 219 பேருக்கும், கோழிக்கோடு மாவட்டத்தில் 174 பேருக்கும், காசர்கோடு மாவட்டத்தில் 153 பேருக்கும், பாலக்காடு மாவட்டத்தில் 36 பேருக்கும், மலப்புரம் மாவட்டத்தில் 129 பேருக்கும், ஆலப்புழா மாவட்டத்தில் 99 பேருக்கும் ஒரே நாளில் புதிதாக தொற்று ஏற்பட்டுள்ளது.

மாநிலத்தில் இதுவரை மொத்தம் 11,983 பேர் சிகிச்சையில் உள்ளனர். பல்வேறு மாவட்டங்களில் மொத்தம் 1,48,039 பேர் கண்காணிப்பில் இருந்து வருகின்றனர். கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் 25,205 மாதிரிகள் பரிசோதனை செய்யப்பட்டன.

மூலக்கதை