கர்நாடகாவின் பெல்தங்காடி தொகுதி எம்.எல்.ஏ.வாக இருக்கும் ஹரீஷ் பூஞ்சாவுக்கு கொரோனா பாதிப்பு உறுதி..!!

தினகரன்  தினகரன்
கர்நாடகாவின் பெல்தங்காடி தொகுதி எம்.எல்.ஏ.வாக இருக்கும் ஹரீஷ் பூஞ்சாவுக்கு கொரோனா பாதிப்பு உறுதி..!!

பெங்களூர்: கர்நாடகாவின் பெல்தங்காடி தொகுதி எம்.எல்.ஏ.வாக இருக்கும் ஹரீஷ் பூஞ்சாவுக்கு லேசான காய்ச்சல் இருந்துள்ளது.  இதனால் அவர் நேற்று கொரோனா பரிசோதனை செய்யப்பட்ட நிலையில், அதன் முடிவுகள் இன்று வெளிவந்தன.  இதில், பூஞ்சாவுக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டு உள்ளது.  இதுபற்றி டுவிட்டரில் அவர் வெளியிட்டுள்ள பதிவில்: எனக்கு வேறு எந்த அறிகுறிகளும் இல்லை.  அதனால், வீட்டில் இருந்தபடியே நான் சிகிச்சை பெற்று வருகிறேன் என தெரிவித்து உள்ளார்.  இந்த நிலையில் சமீபத்தில் பெங்களூருவில் முதல் மந்திரி எடியூரப்பாவை பூஞ்சா தொடர்பு கொண்டுள்ளார்.  கர்நாடக முதல்வர் எடியூரப்பாவின் காவேரி இல்லத்தில் பணியாற்றும் சமையல் கலைஞர்கள் மற்றும் உதவியாளர்களுக்கு கடந்த சில நாட்களுக்கு முன்பு கொரோனா பாதிப்பு ஏற்பட்டது. இதனை தொடர்ந்து, எடியூரப்பாவுக்கும், அவரது மகளுக்கும் கொரோனா பாதிப்பு இருப்பது கடந்த 2ம் தேதி தொற்று உறுதியானது.  இதையடுத்து முதல்-மந்திரி எடியூரப்பா எச்.ஏ.எல். விமான நிலைய ரோட்டில் உள்ள மணிப்பால் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார்.இதனையடுத்து, கர்நாடக முன்னாள் முதல்வர் சித்தராமையாவுக்கு கொரோனா பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டு உள்ளது.  இதனால் அவர் சிகிச்சைக்காக மணிப்பால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உள்ளார்.

மூலக்கதை