ஐபோன் 12க்கு போட்டியாக வரும் கூகுள் பிக்சல் 5 – ஆனால் இந்தியாவில் இல்லை

தினமலர்  தினமலர்
ஐபோன் 12க்கு போட்டியாக வரும் கூகுள் பிக்சல் 5 – ஆனால் இந்தியாவில் இல்லை

ஆப்பிள் நிறுவனத்தின் ஐபோன் 12க்கு போட்டியாக கூகுள் நிறுவனத்தின் பிக்சல் 5 போன்கள் விற்பனைக்கு வர உள்ளன. ஆனால் இந்த வகை போன்கள் இந்திய சந்தையில் கிடைக்காது.

ஸ்மார்ட்போன் சந்தையில் குறைந்த விலையில் பல லேட்டஸ்ட் அம்சங்களுடன் கூடிய போன்களை உருவாக்க மொபைல்போன் நிறுவனங்கள் இடையே கடும் போட்டி நிலவுகிறது. அந்தவகையில் கூகுள் நிறுவனமும் ஏராளமான ஸ்மார்ட் போன்களை வழங்கி வருகிறது. இந்நிறுவனத்தின் லேட்டஸ்ட் மொபைலாக 5ஜி தொழில்நுட்பத்தில் இயங்க கூடிய முதல் கூகுள் போன்களான பிக்சல் 4ஏ மற்றும் பிக்சல் 5 போன்கள் பற்றி அறிவிப்பை வெளியிட்டது.

உலகளாவிய பிரச்னையாக உருவெடுத்துள்ள கொரோனா நோய் தொற்றால் ஆப்பிள் நிறுவனத்தின் ஐபோன் 12 பற்றிய அறிவிப்பு சிலவாரங்கள் தள்ளி போய் உள்ளது. அதன்காரணமாக கூகுள் பிக்சல் 4ஏ மற்றும் பிக்சல் 5 போன்கள் செப்டம்பர் அல்லது அக்டோபரில் அறிமுகமாக வாய்ப்புள்ளது. அதேசமயம் இந்த போன்களுக்கான விலை 499 அமெரிக்க டாலர் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளதாக கூகுள் தெரிவித்துள்ளது.

அமெரிக்கா, கனடா, இங்கிலாந்து, அயர்லாந்து, பிரான்ஸ், ஜெர்மனி, ஜப்பான், தைவான் மற்றும் ஆஸ்திரேலியாவில் பிக்சல் 4ஏ மற்றும் பிக்சல் 5 கிடைக்கும். ஆனால் இந்த போன்கள் விற்பனையாகும் நாடுகளின் பட்டியலில் இந்தியா இடம்பெறவில்லை.

இந்தியாவில் ஏன் இல்லை
பிராஜெக்ட் சோலி என அழைக்கப்படும் ரேடார் சென்சார் பிரச்னை காரணமாக கூகுள் பிக்சல் 4 ரக போன்கள் இந்தியாவுக்கு வரவில்லை. இதே தொழில்நுட்பம் கூகுள் பிக்சல் 4ஏ மற்றும் பிக்சல் 5 போன்களிலும் பயன்படுத்தப்படுகிறது. மேலும் 60GHz ஸ்பெக்ட்ரமிற்கான உரிம சிக்கல்கள் உள்ளன. எல்லாவற்றுக்கும் மேலாக நம் நாட்டில் இன்னும் 5ஜி அம்சங்கள் மேம்படுத்தவில்லை. இது போன்ற காரணங்களால் இந்த போன்கள் இந்திய சந்தைக்கு விற்பனைக்கு வராது என்கின்றனர்.

கூகுள் 4a

அதேசமயம் பட்ஜெட் உணர்வுள்ள வாடிக்கையாளர்களுக்கு தனது தயாரிப்புகளை விரிவுபடுத்தும் நோக்கில் 5ஜி அல்லாத கூகுள் 4a பதிப்பை 349 அமெரிக்க டாலரில் அமெரிக்காவில் அறிமுகப்படுத்தியுள்ளது கூகுள். அதன் விலை இந்திய மதிப்பில் ரூ.26,244 ஆக உள்ளது. அதேசமயம் இந்தியாவில் ஜிஎஸ்டி உள்ளிட்டவை இருப்பதால் இங்கு இந்த போன் விலை சற்று அதிகமாக இருக்கலாம் என தெரிகிறது.

கூகுள் பிக்சல் 4ஏ போனில் 5.38 இஞ்ச் புல் ஹெச்டி ஓலெட் ஹோல் பஞ்ச் டிஸ்பிளே உள்ளது. இதில் HDR+ வசதியும் உள்ளது. கூகுள் பிக்சல் 4ஏ போன் குவால்காம் ஸ்னாப்டிராகன் 730ஜி புராசசர், 6 ஜிபி ராம், 128 ஜிபி ஸ்டோரேஜ். ஆண்ட்ராய்டு 10 ஆபரேடிங் சிஸ்டம், ஆண்ட்ராய்டு 11 ஓஎஸ் அப்டேட் செய்துகொள்ளலாம். 3140 mAh2 கொண்ட பேட்டரி திறன், முன்புற கேமரா 8MP மற்றும் பின்புற கேமரா 12.2 MP, ஆண்ட்ராய்டு 10 operating system போன்றவை இதன் சிறப்பு அம்சங்கள்.

ஐபோன் எஸ்இ மற்றும் ஒன்பிளஸ் நார்டு போன்களுக்கு போட்டியாக இந்த போனை கூகுள் நிறுவனம் அறிமுகப்படுத்தியுள்ளது. இந்திய சந்தையிலும் இந்த போன் விரைவில் அறிமுகமாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

மூலக்கதை