பாலிவுட் நடிகர் சுஷாந்த் சிங் மரணம் தொடர்பாக 6 பேர் மீது சிபிஐ வழக்குப்பதிவு: மத்திய அரசு ஒப்புதல் அளித்த நிலையில் இன்று சிபிஐ விசாரணையை தொடங்கியது..!!

தினகரன்  தினகரன்
பாலிவுட் நடிகர் சுஷாந்த் சிங் மரணம் தொடர்பாக 6 பேர் மீது சிபிஐ வழக்குப்பதிவு: மத்திய அரசு ஒப்புதல் அளித்த நிலையில் இன்று சிபிஐ விசாரணையை தொடங்கியது..!!

பாட்னா: பாலிவுட் நடிகர் சுஷாந்த் சிங் மரணம் தொடர்பாக 6 பேர் மீது சிபிஐ வழக்குப்பதிவு செய்துள்ளது. பீகார் பாட்னா காவல் நிலையத்தில் பதியப்பட்ட \'FIR\' அடிப்படையில் சிபிஐ வழக்குப்பதிவு செய்துள்ளது. மும்பையில் பீகாரை சேர்ந்த நடிகர் சுஷாந்த் சிங் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். தொழில் ரீதியான மன அழுத்தம் தரப்பட்டதாலேயே சுஷாந்த் சிங் தற்கொலை செய்து கொண்டதாக கூறப்படுகிறது. இது தொடர்பாக மும்பை போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். அதேநேரத்தில் பீகார் போலீசாரோ, சுஷாந்த் சிங் மரணம் தொடர்பாக மகாராஷ்டிரா போலீசார் முறையாக விசாரணை நடத்தவில்லை என குற்றம்சாட்டியுள்ளனர். அத்துடன் வெறும் விளம்பரத்துக்காகவே சுஷாந்த் சிங் மரணம் தொடர்பாக மகாராஷ்டிரா போலீசார் பிரபலங்களிடம் விசாரணை நடத்துகின்றனர் என்றும் பீகார் அரசும் குற்றம்சாட்டியது. இந்த நிலையில் சுஷாந்த் சிங் மரணம் தொடர்பாக விசாரணை நடத்த வழக்கை சிபிஐ விசாரிக்க பீகார் மாநில அரசு பரிந்துரைத்தது. இதனையடுத்து பீகார் அரசு கோரியதை அடுத்து மத்திய அரசு ஒப்புதல் அளித்துள்ளது. மத்திய அரசு ஒப்புதல் அளித்த நிலையில் இன்று வழக்குப்பதிவு செய்து சிபிஐ விசாரணையை தொடங்கியது. பாலிவுட் நடிகர் சுஷாந்த் சிங் மரணம் தொடர்பாக 6 பேர் மீது சிபிஐ வழக்குப்பதிவு செய்துள்ளது. பீகார் பாட்னா காவல் நிலையத்தில் பதியப்பட்ட \'FIR\' அடிப்படையில் சிபிஐ வழக்குப்பதிவு செய்துள்ளது.

மூலக்கதை