ஆப்கானிஸ்தான் நாட்டில் கொரோனா தொற்றால் 1 கோடி பேர் பாதிக்கப்பட்டு இருக்கலாம்: சுகாதார அமைச்சகம் அதிர்ச்சி தகவல்..!!

தினகரன்  தினகரன்
ஆப்கானிஸ்தான் நாட்டில் கொரோனா தொற்றால் 1 கோடி பேர் பாதிக்கப்பட்டு இருக்கலாம்: சுகாதார அமைச்சகம் அதிர்ச்சி தகவல்..!!

காபூல்: ஆப்கானிஸ்தான் நாட்டில் கொரோனா தொற்றால் 1 கோடி பேர் பாதிக்கப்பட்டு இருக்கலாம் என சுகாதார அமைச்சகம் தெரிவித்து உள்ளது. ஆப்கானிஸ்தான் அதிகாரப்பூர்வமாக சுமார் 36,000 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு உள்ளனர். இதில் 1,200 இறப்புகளைப் பதிவு செய்துள்ளது, ஆனால் வறுமை மற்றும் பல தசாப்த கால உள்ளூர் சண்டைகளால் பாதிக்கப்பட்டுள்ள ஒரு சுகாதார அமைப்பு காரணமாக பாதிப்புகள் பெருமளவில் குறைவாக பதிவாகியுள்ளன என்று கூறப்படுகிறது.ஆப்கானிஸ்தானில், ஒரு மாதிரி கணக்கெடுப்பில், மக்களில் கிட்டத்தட்ட மூன்றில் ஒரு பகுதியினர் - அல்லது சுமார் 1 கோடி மக்கள் - கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டிருக்கலாம் என்று நாட்டின் சுகாதார அமைச்சர் தெரிவித்துள்ளார்.உலக சுகாதார அமைப்பு மற்றும் ஜான்ஸ் ஹாப்கின்ஸ் பல்கலைக்கழகத்தின் ஆதரவுடன் நாடு முழுவதும் இருந்து 9,500 பேர் மீது ஆன்டிபாடி பரிசோதனையின் விளைவாக இந்த முடிவுகள் கிடைத்து உள்ளன. மேலும் இதுகுறித்து அமைச்சர் அஹ்மத் ஜவாத் உஸ்மானி கூறுகையில்: பெரும்பாலான பாதிப்புகள் நகரங்களில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன, தலைநகர் காபூல் மிகவும் பாதிக்கப்பட்டுள்ளது. பல பாதிப்புகள் அறிகுறியற்றவை என்று நம்பப்படுகிறது என தகவல் தெரிவித்துள்ளார்.

மூலக்கதை