எல்லை பிரச்னை இந்திய - சீன உறவில் ஆதிக்கம் செலுத்தாது: சீன தூதர்

தினமலர்  தினமலர்
எல்லை பிரச்னை இந்திய  சீன உறவில் ஆதிக்கம் செலுத்தாது: சீன தூதர்

வாஷிங்டன்: இந்தியாவிற்கும் சீனாவிற்கும் இடையிலான எல்லை தகராறு, இரு நாட்டு உறவுகளில் ஆதிக்கம் செலுத்தாது என்று எண்ணுவதாக அமெரிக்காவுக்கான சீன தூதர் கூறியுள்ளார்.

இந்திய - சீனா இடையேயான எல்லை பிரச்னை, கடந்த ஜூன் மாதம் மோதலாக உருவெடுத்தது. கடந்த ஜூன் மாதம் லடாக்கின் கல்வான் பள்ளத்தாக்கின் இந்திய பகுதிக்குள் சீன வீரர்கள் நுழைய முயன்ற போது, அவர்களை இந்திய வீரர்கள் தடுத்து நிறுத்தினர். இதில் ஏற்பட்ட மொதலில் 20 இந்திய வீரர்கள் வீரமரணம் அடைந்தனர். சீன தரப்பில் 40-க்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டதாக கூறப்படுகிறது.இந்த மோதலுக்கு பின் இரு நாட்டு உறவுகள் மோசமடைந்துள்ளன. சீன நிறுவனத்தின் நூற்றுக்கும் மேற்பட்ட செயலிகளுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. சீன பொருட்கள் இறக்குமதிக்கும் கடும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. இந்த நிலையில் அமெரிக்காவில் ஆஸ்பென் பாதுகாப்பு மன்ற விவாதத்தில் அந்நாட்டுக்கான சீன தூதர் குய் தியான்கய் பங்கேற்று பேசினார். எல்லை பிரச்னை சீனாவிற்கும் இந்தியாவிற்கும் இடையிலான உறவுகளில் ஆதிக்கம் செலுத்த வேண்டும் என்று நான் நினைக்கவில்லை. இந்திய நண்பர்களின் பார்வையும் இது தானா என்பது எனக்கு தெரியாது. இவ்வாறு கூறினார்.


மற்றொரு செய்தி சேனலுக்கு அளித்த பேட்டியில், எந்த சீன நிறுவனமும், சீன அரசாங்கத்திற்கு தகவல்களை அளித்ததாக ஆதாரம் இல்லை. இக்குற்றச்சாட்டை கூறும் நபர்கள் ஆதாரத்தை காட்டுவதில்லை. ஒரு புதிய பனிப்போர் யாருடைய நலனுக்கும் உதவாது. நாம் 21-ம் நூற்றாண்டில் இருக்கிறோம். வரலாறு மீண்டும் திரும்ப அனுமதிக்கக் கூடாது. இவ்வாறு கூறினார்.

மூலக்கதை