இங்கிலாந்து பவுலர்கள் ஏமாற்றம் | ஆகஸ்ட் 05, 2020

தினமலர்  தினமலர்
இங்கிலாந்து பவுலர்கள் ஏமாற்றம் | ஆகஸ்ட் 05, 2020

மான்செஸ்டர்: பாகிஸ்தானுக்கு எதிரான முதல் டெஸ்டில் இங்கிலாந்து பவுலர்கள் ஏமாற்ற, பாபர் ஆசம் அரைசதம் எட்டினார்.

இங்கிலாந்து சென்ற பாகிஸ்தான் அணி மூன்று போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் பங்கேற்கிறது. முதல் டெஸ்ட் நேற்று மான்செஸ்டரில் துவங்கியது. ‘டாஸ்’ வென்ற பாகிஸ்தான் அணி கேப்டன் அசார் அலி, பேட்டிங் தேர்வு செய்தார்.

பாகிஸ்தான் அணிக்கு ஷான் மசூது, அபித் அலி (16) ஜோடி சுமாரான துவக்கம் கொடுத்தது. அசார் அலி ‘டக்’ அவுட்டானார். அடுத்து ஷான் மசூது, பாபர் ஆசம் இணைந்தனர். ஷான் மசூது மந்தமான ஆட்டத்தை வெளிப்படுத்த, பாபர் ஆசம் சற்று வேகமாக ரன்கள் சேர்த்தார்.

இவர், 14வது அரைசதம் எட்டினார். பாகிஸ்தான் அணி முதல் இன்னிங்சில் 2 விக்கெட்டுக்கு 121 ரன்கள் எடுத்திருந்த போது, மழை காரணமாக போட்டி பாதிக்கப்பட்டது. பாபர் ஆசம் (52), ஷான் மசூது (45) அவுட்டாகாமல் இருந்தனர். இங்கிலாந்து சார்பில் ஆர்ச்சர், வோக்ஸ் தலா ஒரு விக்கெட் சாய்த்தனர்.

 

‘டிவி’ அம்பயர்

ஒருநாள், ‘டுவென்டி–20’ போட்டிகளில் கிரீசிற்கு வெளியில் கால் வைத்து பவுலர்கள் வீசும் ‘நோ பால்களை’ கண்டறிய ‘டிவி’ அம்பயர் பயன்படுத்தப்படுகிறார். தற்போது டெஸ்ட் அரங்கில் முதன் முறையாக இங்கிலாந்து, பாகிஸ்தான் மோதும் தொடரில் இம்முறை பயன்படுத்தப்படுகிறது.

மூலக்கதை