இந்தியாவில் டெஸ்ட் கோப்பை * கனவு காணும் ஸ்டீவ் ஸ்மித் | ஆகஸ்ட் 05, 2020

தினமலர்  தினமலர்
இந்தியாவில் டெஸ்ட் கோப்பை * கனவு காணும் ஸ்டீவ் ஸ்மித் | ஆகஸ்ட் 05, 2020

மெல்போர்ன்: ‘‘இந்திய மண்ணில் டெஸ்ட் தொடர், இங்கிலாந்தில் ஆஷஸ் கோப்பை வெல்வது என இரு பெரிய மலைகளை ஏறியாக வேண்டும்,’’ என ஸ்டீவ் ஸ்மித் தெரிவித்தார்.

இந்திய மண்ணில் 2017 டெஸ்ட் தொடரில் ஸ்டீவ் ஸ்மித் 3 சதங்கள் அடித்த போதும், ஆஸ்திரேலியா 1–2 என தொடரை இழந்தது. 2019ல் இங்கிலாந்தில் ஸ்மித் 774 ரன்கள் குவித்த போதும், கடைசி டெஸ்டை வென்ற இங்கிலாந்து ஆஷஸ் தொடரை ‘டிரா’ (2–2) செய்தது. 

இதுகுறித்து ஸ்மித் 31, கூறியது:

கடந்த ஆஷஸ் தொடரில் கட்டாயம் நாங்கள் வென்றிருக்க வேண்டும். இதில் சாதிக்க முடியாமல் போனது பெரும் ஏமாற்றமாக இருந்தது. மற்றபடி கிரிக்கெட் அரங்கில் இருந்து ஓய்வு பெறும் முன், இந்திய மண்ணில் டெஸ்ட் தொடர், இங்கிலாந்தில் ஆஷஸ் கோப்பை வெல்வது என இரு பெரிய மலைகளை ஏறியாக வேண்டும்.

இதை செய்து முடித்து விட்டால் சிறப்பாக இருக்கும். இப்போது சற்று வயதாகி விட்டது. எதிர்காலம் எப்படி இருக்கும், இன்னும் எத்தனை ஆண்டுகள் கிரிக்கெட் விளையாடுவேன் எனத் தெரியவில்லை. எது எப்படியோ இதை நிறைவேற்ற போராடியாக வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார். 

மூலக்கதை