ஆஸி., – விண்டீஸ் மோதல் ஒத்திவைப்பு | ஆகஸ்ட் 04, 2020

தினமலர்  தினமலர்
ஆஸி., – விண்டீஸ் மோதல் ஒத்திவைப்பு | ஆகஸ்ட் 04, 2020

மெல்போர்ன்: ஆஸ்திரேலியா, விண்டீஸ் அணிகள் மோத இருந்த ‘டுவென்டி–20’ தொடர் ஒத்திவைக்கப்பட்டது.

ஆஸ்திரேலியா செல்ல இருந்த விண்டீஸ் அணி, மூன்று போட்டிகள் கொண்ட சர்வதேச ‘டுவென்டி–20’ தொடரில் பங்கேற்க இருந்தது. இப்போட்டிகள் டவுன்ஸ்வில்லே (அக். 4), கெய்ர்ன்ஸ் (அக். 6), கோல்டுகோஸ்ட் (அக். 9) நகரிங்களில் நடக்க இருந்தன. இத்தொடர், ஆஸ்திரேலியாவில் நடக்க இருந்த ‘டுவென்டி–20’ உலக கோப்பைக்கான பயிற்சியாக கருதப்பட்டது.

சமீபத்தில், கொரோனா வைரஸ் தொற்று பரவல் காரணமாக ‘டுவென்டி–20’ உலக கோப்பை தொடரை ஐ.சி.சி., தள்ளிவைத்தது. இதனையடுத்து ஆஸ்திரேலியா–விண்டீஸ் அணிகளுக்கு இடையிலான ‘டுவென்டி–20’ தொடரும் ஒத்திவைக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டது.

இதுகுறித்து கிரிக்கெட் ஆஸ்திரேலியா (சி.ஏ.,) ‘டுவிட்டரில்’ வெளியிட்ட செய்தியில், ‘‘விண்டீஸ் கிரிக்கெட் போர்டுடன் கலந்து ஆலோசித்து, ‘டுவென்டி–20’ தொடரை ஒத்திவைக்க ஒருமனதாக முடிவு செய்யப்பட்டுள்ளது. ‘டுவென்டி–20’ உலக கோப்பை தொடருக்கான புதிய அட்டவணையை ஐ.சி.சி., அறிவித்த பின்னர், இத்தொடருக்கான மாற்று தேதி வெளியிடப்படும்,’’ என, தெரிவித்திருந்தது.

மூலக்கதை