இங்கிலாந்தை சமாளிக்குமா பாகிஸ்தான் | ஆகஸ்ட் 04, 2020

தினமலர்  தினமலர்
இங்கிலாந்தை சமாளிக்குமா பாகிஸ்தான் | ஆகஸ்ட் 04, 2020

மான்செஸ்டர்: இங்கிலாந்து, பாகிஸ்தான் அணிகள் மோதும் முதல் டெஸ்ட் மான்செஸ்டரில் இன்று துவங்குகிறது.

இங்கிலாந்து சென்றுள்ள பாகிஸ்தான் அணி, மூன்று போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் பங்கேற்கிறது. முதல் டெஸ்ட் மான்செஸ்டரில் இன்று துவங்குகிறது. மீதமுள்ள போட்டிகள் சவுத்தாம்ப்டனில் வரும் ஆக. 13–17 மற்றும் ஆக. 21–25ல் நடக்கவுள்ளன.

சமீபத்தில் விண்டீசுக்கு எதிரான டெஸ்ட் தொடரை 2–1 எனக் கைப்பற்றிய உற்சாகத்தில் இங்கிலாந்து அணி களமிறங்குகிறது. இதில் பங்கேற்ற இங்கிலாந்து வீரர்கள் மீண்டும் தேர்வாகினர். விண்டீசுக்கு எதிராக பேட்டிங்கில் அசத்திய ‘ஆல்–ரவுண்டர்’ பென் ஸ்டோக்ஸ், ரோரி பர்ன்ஸ், டாம் சிப்லே மீண்டும் கைகொடுக்கலாம். ‘வேகத்தில்’ மிரட்டிய ஸ்டூவர்ட் பிராட், கிறிஸ் வோக்ஸ், ஜேம்ஸ் ஆண்டர்சன், ஸ்டோக்ஸ் விக்கெட் வேட்டை நடத்தலாம்.

பாகிஸ்தான் அணிக்கு பேட்டிங்கில் பாபர் ஆசம், கேப்டன் அசார் அலி, பவத் ஆலம், ஆசாத் ஷபிக், இமாம் உல் ஹக், சர்பராஸ் அகமது உள்ளிட்டோர் நம்பிக்கை தரலாம். வேகப்பந்துவீச்சில் ஷஹீன் அப்ரிதி, வகாப் ரியாஸ், நசீம் ஷா கைகொடுக்கலாம். ‘சுழலில்’ யாசிர் ஷா, ஷதாப் கான் உதவ காத்திருக்கின்றனர்.

இதுவரை மோதல்

டெஸ்ட் அரங்கில் இங்கிலாந்து, பாகிஸ்தான் அணிகள் 83 போட்டியில் மோதின. இதில் இங்கிலாந்து 25, பாகிஸ்தான் 21ல் வென்றன. 37 போட்டிகள் ‘டிரா’ ஆனது.

மூலக்கதை