ஐ-லீக் தொடரில் புதிய கிளப் அறிமுகம்

தினகரன்  தினகரன்
ஐலீக் தொடரில் புதிய கிளப் அறிமுகம்

புதுடெல்லி: பிரபல கால்பந்து போட்டியான ஐ-லீக் தொடரில் இந்த முறை டெல்லியிலிருந்து புதிய கிளப் விரைவில் அறிமுகமாகிறது. இந்தியாவின் தேசிய கால்பந்து லீக் தொடர், 2007ம் ஆண்டு முதல் ஐ-லீக் என்று பெயர் மாற்றப்பட்டது. மொத்தம் 11 அணிகள் இந்த போட்டியில் பங்கேற்று வருகின்றன. நடப்பு சாம்பியனான மோகன் பகான் இந்தியாவின் பழமையான கால்பந்து கிளப் ஆகும். இப்போது இந்த கிளப், ஐஎஸ்எல் தொடரில் விளையாடி வரும் ஏடிகே-யுடன் இணைந்து விட்டது. அதனால் இனி ஐஎஸ்எல் தொடரில் மட்டுமே மோகன் பகான்-ஏடிகே விளையாடும். இந்நிலையில் அணிகள் இல்லாத டெல்லி, ராஞ்சி, ஜெய்ப்பூர், ஜோத்பூர் போபால், லக்னோ, அகமதாபாத் ஆகிய நகரங்களுக்கு புதிய அணிகளை தேர்வு செய்வதற்கான ஏலம் நடைபெற்றது. இந்த நகரங்களுக்கான அணிகளைத் தேர்வு செய்த உரிமையாளர்கள் விரைவில் தங்கள் அணிகளை அறிவிப்பார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்நிலையில் ‘டெல்லிக்கான புதிய கிளப் அடுத்த வாரம் அறிவிக்கப்படும்’ என்று அகில இந்திய கால்பந்து சம்மேளனத்தின் தலைவர் பிரபுல் பட்டேல், பொதுச் செயலாளர் குஷால் தாஸ் ஆகியோர் நேற்று தெரிவித்தனர்.

மூலக்கதை