லெபனானில் வெடித்தது 2,750 டன் அம்மோனியம் நைட்ரேட் வெடிபொருள்

தினமலர்  தினமலர்
லெபனானில் வெடித்தது 2,750 டன் அம்மோனியம் நைட்ரேட் வெடிபொருள்

பெய்ரூட்: லெபனானில் வெடித்தது 2,750 டன் அம்மோனியம் நைட்ரேட் வெடிபொருள் என தகவல் வெளியாகியுள்ளது.

மேற்குஆசிய நாடான லெபானின் தலைநகர் பெய்ரூட் நகரில் துறைமுகம் மற்றும் வேர்ஹவுஸ் என இரண்டு இடங்களில் ஒரே நேரத்தில் பயங்கர சத்தத்துடன் மிகப்பெரிய குண்டு வெடிப்பு சம்பவம் நடந்தது. இந்த சம்பவத்தையடுத்து அங்குள்ள ஏராளமான கட்டடங்கள் குலுங்கின. நகரமே புகை மண்டலமாக காட்சியளித்தது. குண்டு வெடித்த நிகழ்வு வீடியோவாக ஏ.என்.ஐ. டுவிட்டரில் வெளியாகியுள்ளது. இதில் 73 பேர் பலியானதாகவும், பலர் காயமடைந்ததாகவும் தகவல் வெளியாகியுள்ளது.



2750 டன் அம்மோனியம் நைட்ரேட்



இந்த சம்பவம் குறித்து லெபனான் பிரதமர் ஹசன் தியாப் கூறியது, தலைநகரையே அழிக்க திட்டமிட்டு மிகப்பரெிய குண்டு வெடிப்பு சம்பவம் நடத்தியுள்ளனர். இதில் 2,750 டன் எடையுள்ள அம்மோனியம் நைட்ரேட் என்ற வெடிபொருள் பயன்படுத்தப்பட்டுள்ளது என்றார்.

இந்த குண்டுவெடிப்பு சம்பவம் குறித்து அமெரிக்க அதிபர் டிரம்ப் கூறியது, லெபனானில் இது போன்ற மிகப்பெரிய வெடிகுண்டு தாக்குதல் நிகழ்ந்ததில்லை. பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதல் போன்று உள்ளது என்றார்.

சிரியாவின் அண்டை நாடான லெபனானில், ஷியா மற்றும் சன்னி பிரிவினர் இடையே அடிக்கடி மோதல்கள் நிகழும்; தாக்குதல்களும் நடைபெறும். இதில் அரசுக்கு எதிராக ஹிஸ்போல்லாஹ் பயங்கரவாதிகள் செயல்பட்டு வருகின்றனர்.

இந்தியர்கள் கதி



குண்டு வெடிப்பு சம்பவத்தையடுத்து இந்தியர்கள் நிலை குறித்து தெரிந்து கொள்ள லெபனானில் உள்ள இந்திய தூதரகம் அவசர சேவை எண் மற்றுறம் தொலை பேசி எண் வெளியிட்டுள்ளது.

மூலக்கதை