கர்நாடகாவில் சித்தராமையாவுக்கு கொரோனா

தினகரன்  தினகரன்
கர்நாடகாவில் சித்தராமையாவுக்கு கொரோனா

பெங்களூரு: கர்நாடக முன்னாள் முதல்வரும் சட்டப்பேரவை எதிர்க்கட்சி தலைவருமான சித்தராமையாவுக்கு கொரோனா தொற்று  உறுதியாகி பெங்களூரு மணிப்பால் மருத்துவமனையில் சிகிச்சைக்கு சேர்க்கப்பட்டுள்ளார். அதே மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் முதல்வர் எடியூரப்பாவை அவர் சந்தித்து நலம் விசாரித்த பிறகு அவருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டது. சித்தராமையாவின் மனைவி, மகனும் எம்எல்ஏவுமான டாக்டர் யதீந்திரா உள்பட குடும்பத்தில் உள்ள அனைவருக்கும் கோவிட்-19 பரிசோதனை செய்துள்ளதுடன் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர். இந்நிலையில் பெங்களூருவில் சித்தராமையாவுக்கு ஒதுக்கீடு செய்துள்ள அரசு இல்லம் மற்றும் மைசூருவில் உள்ள அவரது சொந்த வீடுகள் சானிடைஸ் செய்தபின் நேற்று தொடங்கி வரும் 18ம் தேதி வரை சீல் செய்யப்பட்டுள்ளது.

மூலக்கதை