நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் ஆகஸ்ட் இறுதி அல்லது செப்டம்பர் முதல் வாரத்தில் தொடங்க வாய்ப்பு

தினகரன்  தினகரன்
நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் ஆகஸ்ட் இறுதி அல்லது செப்டம்பர் முதல் வாரத்தில் தொடங்க வாய்ப்பு

டெல்லி: நாடு முழுவதும் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கையானது 19.12 லட்சமாக அதிகரித்துள்ள நிலையில் நாடாளுமன்றத்தின் மழைக்கால கூட்டத்தொடர் ஆகஸ்ட் இறுதி அல்லது செப்டம்பர் முதல் வாரத்தில் தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. மக்களவை மற்றும் மாநிலங்களவையில் சுகாதார வழிகாட்டுதல்கள் பின்பற்றப்படும் என தெரிகிறது.\r நாடாளுமன்றத்தின் இரு அவைகளும் மழைக்கால அமர்வின் போது செயல்படும் என்றாலும், அவை ஒரு நாளைக்கு நான்கு மணி நேரத்திற்கு மட்டுமே செயல்படும் என்று வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. முதலில் மக்களவை கூட்டத்தொடரும் அதைத் தொடர்ந்து மாநிலங்களவை கூட்டத்தொடரும் நடைபெறும். மக்களவை உறுப்பினர்களுக்கான கூட்டம் முடிந்த பின்னர் அவர்கள் நாடாளுமன்றத்தைவிட்டு வெளியேறுவார்கள். அதன் பின்னர் மாநிலங்களவை கூட்டம் நடைபெறும்.\r இந்த இரு அவைகளின் கூட்டம் குறித்து, மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா மற்றும் மாநிலங்களவை தலைவர் வெங்கையா நாயுடு ஆகியோர் விரிவான கலந்துரையாடலை நடத்தியுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்த கூட்டத்தொடரில் பத்திரிக்கையாளர்கள் குறைந்த அளவிலேயே அனுமதிக்கப்படுவார்கள். கொரோனா முழு முடக்கத்திற்கு பின்னர் நடைபெறும் முதல் நாடாளுமன்ற கூட்டத்தொடர் இதுவேயாகும்.

மூலக்கதை