தனித்திருந்து கொரோனாவை விரட்டுவோம்.. இந்தியாவில் பாதிப்பு 18.55 லட்சத்தை கடந்த நிலையில், குணமடைந்தோர் எண்ணிக்கை 12.30 லட்சத்தை தாண்டியது!!!

தினகரன்  தினகரன்
தனித்திருந்து கொரோனாவை விரட்டுவோம்.. இந்தியாவில் பாதிப்பு 18.55 லட்சத்தை கடந்த நிலையில், குணமடைந்தோர் எண்ணிக்கை 12.30 லட்சத்தை தாண்டியது!!!

புதுடெல்லி: இந்தியாவில் கொரோனா பாதிப்பு 18.55 லட்சத்தை கடந்த நிலையில், குணமடைந்தோர் எண்ணிக்கை 12 லட்சத்தை தாண்டியது. உலக அளவில் மொத்த பாதிப்பு 2 கோடியை நெருங்குகிறது. நாட்டில் இன்று காலை 8 மணியுடன் முடிவடைந்த 24 மணி நேரத்தில் 52,050 பேர் கொரோனா நோய் தொற்றின் காரணமாக புதிதாக பாதிக்கப்பட்டுள்ளனர். இதனை தொடர்ந்து பாதிக்கப்பட்டோரின் மொத்த எண்ணிக்கையானது 18,55,745 ஆக உயர்ந்துள்ளது. இதில் 5,86,298 பேர் சிகிச்சை பெற்று வரும் நிலையில்,12,30,510 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். ஒரே நாளில் மேலும் 803 உயிரிழப்புக்கள் பதிவாகி உள்ளது. உயிரிழந்தவர்களின் மொத்த எண்ணிக்கையானது 38,938 ஆக உயர்ந்துள்ளது.மாநிலங்கள் வாரியான விவரம்!!மகாராஷ்டிராவில் நேற்று 8,968 பேருக்குப் பாதிப்பு உறுதியாகி மொத்த எண்ணிக்கை 4,50,196 ஆகி உள்ளது  நேற்று 266 பேர் உயிர் இழந்து மொத்தம் 15,842 பேர் மரணம் அடைந்துள்ளனர்.  நேற்று 10,221 பேர் குணமடைந்து மொத்தம் 2,87,030  பேர் குணமடைந்து வீடு திரும்பி உள்ளனர்.தமிழகத்தில் நேற்று 5,608 பேருக்குப் பாதிப்பு உறுதியாகி மொத்த எண்ணிக்கை 2,53,222 ஆகி உள்ளது  இதில் நேற்று 109 பேர் உயிர் இழந்து மொத்தம் 4,241 பேர் மரணம் அடைந்துள்ளனர்.  நேற்று 5,800 பேர் குணமடைந்து மொத்தம் 2,02,283 பேர் குணமடைந்து வீடு திரும்பி உள்ளனர்.ஆந்திர மாநிலத்தில் நேற்று 7,872 பேருக்குப் பாதிப்பு உறுதியாகி மொத்த எண்ணிக்கை 1,66,586 ஆகி உள்ளது  இதில் நேற்று 63 பேர் உயிர் இழந்து மொத்தம் 1,537 பேர் மரணம் அடைந்துள்ளனர்.  நேற்று 5,786 பேர் குணமடைந்து மொத்தம் 86,672 பேர் குணமடைந்து வீடு திரும்பி உள்ளனர்.கர்நாடகா மாநிலத்தில் நேற்று 4,752 பேருக்குப் பாதிப்பு உறுதியாகி மொத்த எண்ணிக்கை 1,39,571 ஆகி உள்ளது  இதில் நேற்று 98 பேர் உயிர் இழந்து இதுவரை மொத்தம் 2,594 பேர் மரணம் அடைந்துள்ளனர்.  நேற்று 4,775 பேர் குணமடைந்து மொத்தம் 62,500 பேர் குணமடைந்து வீடு திரும்பி உள்ளனர்.டில்லியில் நேற்று 805 பேருக்குப் பாதிப்பு உறுதியாகி மொத்த எண்ணிக்கை 1,38,482 ஆகி உள்ளது  இதில் நேற்று 17  பேர் உயிர் இழந்து மொத்தம் 4,021 பேர் மரணம் அடைந்துள்ளனர்.  நேற்று 937 பேர் குணமடைந்து மொத்தம் 1,24,254 பேர் குணமடைந்து வீடு திரும்பி உள்ளனர்.

மூலக்கதை