கர்நாடகாவில் இதுவரை 62,500 பேர் கொரோனாவிலிருந்து மீண்டனர்

தினமலர்  தினமலர்
கர்நாடகாவில் இதுவரை 62,500 பேர் கொரோனாவிலிருந்து மீண்டனர்

பெங்களூரு: கர்நாடகாவில் இதுவரை 62,500 பேர் கொரோனாவிலிருந்து மீண்டுள்ளனர். இதையடுத்து அங்கு கொரோனாவிலிருந்து குணமைடைந்தவர்கள் விகிதம் 44.7 சதவீதமாக உயர்ந்துள்ளது.


இருப்பினும் கர்நாடகாவில் புதிதாக 4,752 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டது. இதனால் கொரோனா பாதித்தவர்களின் மொத்த எண்ணிக்கை 1,39,571 ஆக உயர்ந்தது. கடந்த 24 மணி நேரத்தில் மேலும் 98 பேர் பலியானதைத் தொடர்ந்து கொரோனாவுக்கு பலியானவர்களின் மொத்த எண்ணிக்கை 2,2594 ஆக உயர்ந்துள்ளது.

பெங்களூருவில் மட்டும் கொரோனா பாதித்தவர்களின் எண்ணிக்கை 60 ஆயிரத்தை தாண்டியுள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் நகரில் மேலும் 1,497 பேர் கொரோனா தொற்றால் பாதிப்பு அடைந்தனர். அதே போல் மைசூருவில் 5000 பேர் கொரோனாவால் பாதிப்பு அடைந்த நிலையில் ஒரு நாளில் புதிதாக 327 பேர் கொரோனா பாதிப்புக்குள்ளாகினர்.

மாநில முதல்வர் பி.எஸ்.எடியூரப்பாவுக்கு கொரோனா தொற்று ஏற்பட்டதைத் தொடர்ந்து பெங்களூருவில் தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். அவரது உடல்நிலை சீராக இருப்பதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளார். முதல்வர் மகள் பத்மாவதிக்கும் கொரோனா உறுதியானதால் அவரும் மருத்துவமனையில் சிகிச்சையில் உள்ளார்.


இன்றைய தேதியில் மாநிலத்தில் 74,469 பேர் சிகிச்சையில் உள்ளனர். சிகிச்சை பெற்று வருவோரில் 629 பேர் தீவிர சிகிச்சைப் பிரிவில் உள்ளனர். மாநிலத்தில் கொரோனா மீட்பு விகிதம் 44.7 சதவீதமாக உள்ள நிலையில் பெங்களூருவில் மட்டும் கொரோனாவிலிருந்து குணமடைந்தவர்கள் விகிதம் 35.14 சதவீதமாக உள்ளது. இவ்வாறு மாநில சுகாதாரத்துறை அறிவித்துள்ளது.

மூலக்கதை