ஐ.ஏ.எஸ்., அதிகாரி மீது சொத்து குவிப்பு வழக்கு?

தினமலர்  தினமலர்
ஐ.ஏ.எஸ்., அதிகாரி மீது சொத்து குவிப்பு வழக்கு?

சென்னை: பீலா ராஜேஷ் ஐ.ஏ.எஸ்., மீது வருமானத்துக்கு அதிகமாக சொத்து சேர்த்திருப்பதாக, மத்திய அரசுக்கு புகார்கள் சென்றுள்ளன.

தமிழகத்தைச் சேர்ந்தவர் பீலா ராஜேஷ்; ஐ.ஏ.எஸ்., அதிகாரி. தமிழகத்தில் கொரோனா பரவ துவங்கிய போது, சுகாதாரத்துறை செயலராக இருந்தார். பின், வணிக வரித்துறை செயலராக மாற்றப்பட்டார்.


இந்நிலையில், இவர் வருமானத்துக்கு அதிகமாக சொத்து சேர்த்திருப்பதாக, மத்திய அரசுக்கு புகார்கள் சென்றன. அந்த புகார் குறித்து விசாரித்து, உரிய நடவடிக்கை எடுக்கும்படி, தமிழக அரசின் தலைமை செயலருக்கு, மத்திய அரசின் பணியாளர் நிர்வாக சீர்திருத்தத்துறை, கடிதம் அனுப்பி உள்ளது. இந்த விவகாரம், ஐ.ஏ.எஸ்., அதிகாரிகள் வட்டாரத்தில், சலசலப்பை ஏற்படுத்தி உள்ளது.

மூலக்கதை