சிங்கப்பூர் நீதிபதியாக இந்தியர் பதவியேற்பு

தினமலர்  தினமலர்
சிங்கப்பூர் நீதிபதியாக இந்தியர் பதவியேற்பு

சிங்கப்பூர் : சிங்கப்பூர் உயர் நீதிமன்ற நீதிபதியாக, இந்திய வம்சாவளியைச் சேர்ந்த அறிவுசார் சொத்துரிமை நிபுணரான தேதர் சிங் கில், பதவியேற்றுள்ளார்.

தென்கிழக்கு ஆசிய நாடான சிங்கப்பூரின், முன்னணி சட்ட நிறுவனம் ஒன்றில், அறிவுசார் சொத்துரிமை துறையின் நிர்வாக இயக்குனராக பணியாற்றி வந்தவர், தேதர் சிங் கில், 61. இந்திய வம்சாவளியான இவர், அங்கு வேலை பார்த்தபோது, உயர் நீதிமன்றம் மற்றும் மேல்முறையீட்டு நீதிமன்றத்தில், தன் வாடிக்கையாளர்களுக்காக பலமுறை வழக்கறிஞராக ஆஜராகியுள்ளார்.

இதையடுத்து, 2018 ஆகஸ்டில், தேதர் சிங் கில், உச்ச நீதிமன்றத்தின் நீதித்துறை ஆணையராக நியமிக்கப்பட்டார். அதன்பின், அறிவுசார் சொத்து வழக்குகளை நிர்வகிக்கும் அதிகாரியாகவும், அவரை, தலைமை நீதிபதி சுந்தரேஷ் மேனன் நியமித்தார்.

இந்நிலையில், தேதர் சிங் கில், சிங்கப்பூர் உயர் நீதிமன்ற நீதிபதியாக, ஏப்ரல் மாதம் நியமிக்கப்பட்டார். அதிபர் ஹலிமா யாகூப் முன்னிலையில், உயர் நீதிமன்ற நீதிபதியாக, கில், நேற்று பதவியேற்றுக் கொண்டார்.

மூலக்கதை