ஜாதவுக்கு வழக்கறிஞர் பாக்., கோர்ட் அனுமதி

தினமலர்  தினமலர்
ஜாதவுக்கு வழக்கறிஞர் பாக்., கோர்ட் அனுமதி

இஸ்லாமாபாத்; பாகிஸ்தானில் சிறைபிடிக்கப்பட்டுள்ள இந்தியர் குல்பூஷன் ஜாதவுக்கு ஆதரவாக வாதாட, வழக்கறிஞரை நியமிக்க, மத்திய அரசுக்கு அனுமதி அளித்து, பாக்., நீதிமன்றம் அனுமதி அளித்துள்ளது.

கடற்படை அதிகாரியான குல்பூஷன் ஜாதவ், தங்கள் நாட்டில் உளவு பார்த்ததாக, பாகிஸ்தான் போலீசார் கைது செய்தனர். அவருக்கு, பாக்., ராணுவ நீதிமன்றம் மரண தண்டனை விதித்தது. இந்த தீர்ப்புக்கு, சர்வதேச நீதிமன்றம் இடைக்கால தடை விதித்தது.

தீர்ப்பை எதிர்த்து, மேல் முறையீடு செய்ய, ஜாதவுக்கு அனுமதி அளிக்கும் படியும், சர்வதேச நீதிமன்றம், பாகிஸ்தானுக்கு உத்தரவிட்டது. இதையடுத்து, இஸ்லாமாபாத் உயர் நீதிமன்றத்தில், ஜாதவின் மேல் முறையீட்டு மனு மீதான விசாரணை துவங்கிஉள்ளது.

நேற்றைய விசாரணையின் போது, ஜாதவ் சார்பில் வாதாடுவதற்கு, வழக்கறிஞரை நியமிக்க, இந்தியாவுக்கு அனுமதி அளித்து, இஸ்லாமாபாத் உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது. இதையடுத்து, இந்த வழக்கு, அடுத்த மாதம், 3ம் தேதிக்கு ஒத்தி வைக்கப்பட்டது.

மூலக்கதை