ஊழல் குற்றச்சாட்டு : நாட்டை விட்டு வெளியேற ஸ்பெயின் மாஜி மன்னர் முடிவு

தினமலர்  தினமலர்
ஊழல் குற்றச்சாட்டு : நாட்டை விட்டு வெளியேற ஸ்பெயின் மாஜி மன்னர் முடிவு

மாட்ரிட்: தன் மீதான ஊழல் குற்றச்சாட்டு காரணமாக நாட்டை விட்டு வெளியேற முன்னாள் ஸ்பெயின் மன்னர் ஜூவான் கார்லோஸ் முடிவு செய்துள்ளார்.

ஸ்பெயின் நாட்டு மன்னராக 35ஆண்டுகளுக்கு மேல் இருந்த ஜுவான் கார்லோஸ் (76) தனது மகன் பிலிப்பை (46) கடந்த 2014-ம் ஆண்டு மன்னராக முடிசூட்டினார். இந்நிலையில் சவுதி அரேபியாவில் அதிவேக ரயில்வே திட்டப் பணிகள் மேற்கொள்ள போடப்பட்ட ஒப்பந்தத்தில் 100 மில்லியன் டாலர் அளவுக்கு ஊழல் செய்ததாகவும், ஊழல் பணத்தை சவுதி மன்னரிடமே பெற்றதாக பத்திரிகைகளில் செய்தி வெளிவந்தது.தன் மீதான குற்றச்சாட்டு நிரூபணம் ஆகும் நிலையில் உள்ளதையறிந்த ஜூவான் கார்லோஸ் கடந்த சில தினங்களுக்கு தனது மகன் பிலிப்பிடம் தாம் நாட்டை விட்டு வெளியேற உள்ளதாக கூறி வந்தார். இந்த சூழ்நிலையில் நேற்று அவர் நாட்டை விட்டு வெளியேற உள்ளது அதிகாரப்பூர்வாக தெரியவந்தது.

மகன் பிலிப்பும் ஜூவான் கார்லோஸ் முடிவை ஏற்றுக்கொண்டார். எனினும் அவர் மீது ஊழல் வழக்குகள் ஸ்பெயின் சுப்ரீம் கோர்ட்டில் கடந்த ஜூன் மாதம் விசாரணைக்கு ஏற்றுக்கொள்ளப்பட்ட நிலையில் திடீரென நாட்டை விட்டு வெளியேற உள்ளார் மாஜி மன்னர் கார்லோஸ்.

மூலக்கதை