பிரிட்டிஷ் கிராண்ட் பிரீ 7வது முறையாக ஹாமில்டன் சாம்பியன்

தினகரன்  தினகரன்
பிரிட்டிஷ் கிராண்ட் பிரீ 7வது முறையாக ஹாமில்டன் சாம்பியன்

லண்டன்: பிரிட்டிஷ் கிராண்ட் பிரீ பார்முலா 1 கார் பந்தயத்தில் மெர்சிடிஸ் அணி வீரர் லூயிஸ் ஹாமில்டன் (இங்கிலாந்து) 7வது முறையாக சாம்பியன் பட்டம் வென்று சாதனை படைத்தார். சில்வர்ஸ்டோன் பந்தயக் களத்தில் நடந்த இப்போட்டியில் அபாரமாக செயல்பட்ட ஹாமில்டன், பந்தய தூரத்தை (52 லேப்) 1 மணி, 28 நிமிடம், 01.283 விநாடிகளில் கடந்து முதலிடம் பிடித்தார். கடைசி சுற்றின்போது அவரது காரின் டயர் பங்ச்சர் ஆனதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. எனினும், சாமர்த்தியமாக காரை இயக்கிய ஹாமில்டன் 7வது முறையாக பிரிட்டிஷ் கிராண்ட் பிரீ கோப்பையை 7வது முறையாக முத்தமிட்டார். ரெட் புல் ரேசிங் ஹோண்டா வீரர் மேக்ஸ் வெர்ஸ்டாப்பன் (+5.856 வி.) 2வது இடமும், பெராரி வீரர் சார்லஸ் லெக்ளர்க் (+18.474 வி.) 3வது இடமும் பிடித்தனர். நடப்பு சீசனில் இதுவரை 4 பந்தயங்கள் நடைபெற்றுள்ள நிலையில், மெர்சிடிஸ் வீரர்கள் ஹாமில்டன் (88 புள்ளி), வால்டெரி போட்டாஸ் (58 புள்ளி) முதல் 2 இடங்களில் உள்ளனர். ரெட் புல் வீரர் வெர்ஸ்டாப்பன் (52 புள்ளி), மெக்லாரன் ரெனால்ட் வீரர் லேண்டோ நோரிஸ் (36 புள்ளி), பெராரியின் லெக்ளர்க் (33 புள்ளி) அடுத்த இடங்களை பிடித்துள்ளனர்.

மூலக்கதை