கலெக்டர் கணக்கில் ரூ.2 கோடி மோசடி முதுநிலை கணக்காளர் டிஸ்மிஸ்

தினகரன்  தினகரன்
கலெக்டர் கணக்கில் ரூ.2 கோடி மோசடி முதுநிலை கணக்காளர் டிஸ்மிஸ்

திருவனந்தபுரம்: திருவனந்தபுரம் வஞ்சியூரில் உள்ள சார் கருவூலத்தில் மாவட்ட கலெக்டரின் கணக்கில் இருந்த அரசு பணத்தில் இருந்து ரூ.2 கோடிக்கு மேல் மோசடி நடந்ததாக குற்றச்சாட்டு எழுந்தது. இது குறித்து நிதித்துறை அதிகாரிகள் விசாரித்தததில், அங்கு பணிபுரியும் பிஜூ லால் என்ற முதுநிலை கணக்காளர், ஓய்வு பெற்ற தலைமை கருவூல அதிகாரியின் யூசர் நேம் மற்றும் பாஸ்வேர்டை பயன்படுத்தி பணத்தை தனது சொந்த கணக்கிற்கு மாற்றியது தெரியவந்தது. இது குறித்து வஞ்சியூர் போலீசில் புகார் அளிக்கப்பட்ட நிலையில் நேற்று அதிரடியாக பிஜூலால் பணியில் இருந்து டிஸ்மிஸ் செய்யப்பட்டார். 

மூலக்கதை