புத்தகப்பை கிடைச்சாச்சு! பள்ளி மாணவர்கள் குஷி

தினமலர்  தினமலர்
புத்தகப்பை கிடைச்சாச்சு! பள்ளி மாணவர்கள் குஷி

திருப்பூர்:இரண்டு முதல் எட்டாம் வகுப்பு வரை படிக்கும் மாணவர்களுக்கான புத்தகம் மற்றும் 'பேக்' ஆகியன பள்ளிகளிலும் நேற்று வினியோகிக்கப்பட்டன.அரசு பள்ளிகளில், 2 முதல் 8ம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு நேற்று முதல் விலையில்லா பாடபுத்தகங்கள் நோட்டு, ஸ்கூல் பைகள் அரசு மற்றும் உதவிபெறும் பள்ளிகளில் வினியோகிக்கப்பட்டன.

பள்ளி தலைமை ஆசிரியர்கள் கூறுகையில், 'சமூக இடைவெளி பின்பற்றும் வகையில், வகுப்பிற்கு தலா, 20 மாணவர்களாக பள்ளிக்கு வரவழைத்து பாடபுத்தகங்கள் வழங்கப்படுகின்றன. தொடக்கப்பள்ளி மாணவர்கள், 5ம் வகுப்பிற்கு பிறகு பிற பள்ளிகள் மாற வாய்ப்புள்ளதால், 6ம் வகுப்பு மாணவர்களுக்கும், அட்மிஷன் நடக்காததால் ஒன்றாம் வகுப்பு மாணவர்களுக்கும் புத்தகம் வழங்கப்படவில்லை.இதுகுறித்து அறிவிப்பு பின்னர் வெளியப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. மாணவர்கள் பள்ளிகள் திறக்கும் வரை இப்புத்தகம் மற்றும் ஆன்லைன் பாடங்களை கவனத்துடன் பார்த்து பயன்பெறலாம்' என்றனர்.

மூலக்கதை