கொரோனா தடுப்பு தலைவராக டிராவிட் | ஆகஸ்ட் 03, 2020

தினமலர்  தினமலர்
கொரோனா தடுப்பு தலைவராக டிராவிட் | ஆகஸ்ட் 03, 2020

புதுடில்லி: பி.சி.சி.ஐ., கொரோனா தடுப்புக்குழு தலைவராக டிராவிட் நியமிக்கப்பட உள்ளார்.

இந்திய அணி முன்னாள் வீரர் டிராவிட். தேசிய கிரிக்கெட் அகாடமி தலைவராக உள்ளார். ஐ.பி.எல்., தொடருக்காக புதிய கொரோனா தடுப்புக் குழு நியமிக்கப்பட்டுள்ளது. இதற்கு டிராவிட் தலைவராக நியமிக்கப்படுவார் எனத் தெரிகிறது. இதில் மருத்துவ அதிகாரி, சுகாதார அதிகாரி உள்ளிட்டோர் இடம் பெற்றிருப்பர்.

இதன் படி, கொரோனா தடுப்பு விதிகளை பின்பற்றுமாறு அனைவருக்கும் இக்குழு ஆலோசனை தர வேண்டும். இதனால், பயிற்சியை துவக்கும் முன் கொரோனா தடுப்பு திட்ட அறிக்கையில் அனைத்து வீரர்களும் கையெழுத்திட உள்ளனர். இதன் படி 60 வயதுக்கு மேற்பட்டவர்கள் பயிற்சி முகாமில் பங்கேற்க தடை விதிக்கப்படுகிறது.

மூலக்கதை