இர்பான் பதான் மறுப்பு | ஆகஸ்ட் 03, 2020

தினமலர்  தினமலர்
இர்பான் பதான் மறுப்பு | ஆகஸ்ட் 03, 2020

புதுடில்லி: ‛‛அன்னிய மண்ணில் நடக்கும் எந்த ஒரு ‛டுவென்டி-20’ லீக் தொடரிலும் விளையாட ஒப்பந்தம் செய்யப்படவில்லை,’’ என, இர்பான் பதான் தெரிவித்துள்ளார்.

இலங்கையில், முதன்முறையாக லங்கா பிரிமியர் லீக் ‛டுவென்டி-20’ கிரிக்கெட் தொடர் வரும் ஆக. 28 முதல் செப். 20 வரை நடக்கிறது. இதில் கொழும்பு, கண்டி, காலே, தம்புலா, யாழ்ப்பாணம் (ஜாப்னா) என்ற 5 அணிகள் பங்கேற்கின்றன. மொத்தம் 23 போட்டிகள், கொழும்பு, தம்புலா, பல்லேகெலே, அம்பாந்தோட்டை நகரங்களில் உள்ள 4 சர்வதேச மைதானங்களில் நடக்கவுள்ளன.

கடந்த ஜனவரி மாதம் ஓய்வை அறிவித்த இந்திய அணியின் முன்னாள் ‛ஆல்-ரவுண்டர்’ இர்பான் பதான், லங்கா பிரிமியர் லீக் தொடரில் விளையாட விருப்பம் தெரிவித்திருப்பதாக செய்திகள் வெளியானது.

இதனை மறுத்து இர்பான் பதான், தனது ‛டுவிட்டரில்’ வெளியிட்ட செய்தியில், ‛‛அன்னிய மண்ணில் நடக்கும் ‛டுவென்டி-20’ லீக் தொடரில் பங்கேற்க விரும்புகிறேன். ஆனால், இதுவரை எந்த ஒரு தொடரிலும் விளையாட ஒப்பந்தம் செய்யப்படவில்லை,’’ என்றார்.

மூலக்கதை