வெளிநாடுகளிலிருந்து இந்தியா வருவோருக்கு புதிய நெறிமுறைகள்!: கொரோனா நோயாளிகள் செல்போன் பயன்படுத்த அனுமதிக்க மத்திய அரசு அறிவுறுத்தல்..!!

தினகரன்  தினகரன்
வெளிநாடுகளிலிருந்து இந்தியா வருவோருக்கு புதிய நெறிமுறைகள்!: கொரோனா நோயாளிகள் செல்போன் பயன்படுத்த அனுமதிக்க மத்திய அரசு அறிவுறுத்தல்..!!

டெல்லி: வெளிநாடுகளிலிருந்து இந்தியா வருவோருக்கான புதிய வழிகாட்டு நெறிமுறைகளை வெளியிட்டுள்ள மத்திய அரசு கொரோனா நோயாளிகள் செல்போன் பயன்படுத்த அனுமதி வழங்கியுள்ளது. வெளிநாடுகளிலிருந்து இந்தியா வரும் பயணிகளுக்குக்கான புதிய வழிகாட்டு நெறிமுறைகளை உள்துறை அமைச்சகம் நேற்று வெளியிட்டது. வரும் 8ம் தேதியிலிருந்து அமலுக்கு வரும் இந்த விதிமுறை காரணமாக தாயகம் திரும்பும் பயணியர் 14 நாட்கள் கட்டாயம் தனிமைப்படுத்தப்படுவார்கள். முதல் 7 நாட்கள் தனிமைப்படுத்தும் மையத்திலும், அடுத்த 7 நாட்கள் வீட்டிலும் தனித்திருக்க வேண்டும். அதேசமயம் கொரோனா தொற்று இல்லை என்று உறுதி சான்றிதழ் சமர்ப்பித்தால் தனிமைப்படுத்தும் மையத்தில் இருந்து அவர்களுக்கு விலக்கு அளிக்கப்படும். இந்தியாவுக்கு புறப்படுவதற்கு 72 மணி நேரத்திற்கு முன்பாக டெல்லி விமான நிலைய இணையதளத்தில் இதற்கான சுய ஒப்புதல் படிவத்தை பூர்த்தி செய்து தாக்கல் செய்ய வேண்டும். கொரோனா பரவலை தடுக்கும் வகையில் சர்வதேச விமான சேவைகளுக்கான தடை இந்த மாத இறுதிவரை நீட்டிக்கப்பட்டுள்ளது. எனினும் வெளிநாடுகளில் இருந்து இந்தியர்களை அழைத்து வரும் வந்தே பாரத் சிறப்பு விமானங்களுக்கும், சரக்கு விமானங்களுக்கும் இந்த விதிமுறை பொருந்தாது. இதனிடையே மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள கொரோனா நோயாளிகள் உறவினர்களுடன் பேசுவதற்காக செல்போன் பயன்படுத்த அனுமதிக்க வேண்டும் என மாநிலங்களுக்கு மத்திய அரசு அறிவுறுத்தியுள்ளது.

மூலக்கதை