ராணுவம் தொடர்பான படங்களுக்கு என்.ஓ.சி: பாதுகாப்பு அமைச்சகம் உத்தரவு

தினமலர்  தினமலர்
ராணுவம் தொடர்பான படங்களுக்கு என்.ஓ.சி: பாதுகாப்பு அமைச்சகம் உத்தரவு

பிரபல பாலிவுட் தயாரிப்பாளர் ஏக்தா கபூர் எக்ஸ்.எக்ஸ்.எக்ஸ் அன் சென்சார் என்ற தொடரை ஓடிடி தளத்தில் வெளியிட்டுள்ளார். இதன் இரண்டாம் பகுதி இப்போது வெளிவந்துள்ளது. இந்த தொடரில் இந்திய ராணுவத்திரை அவதூறாக சித்தரிக்கும் காட்சிகள் உள்ளது. குறிப்பாக எல்லையில் நாட்டை காக்கும் ராணுவ வீரனின் மனைவி ஊரில் இன்னொருவருடன் கள்ளத் தொடர்பு வைத்திருப்பதாக சித்தரிக்கப்பட்டுள்ளது.

இந்த சீரிசுக்கு தடை விதிக்க வேண்டும் என்று முன்னாள் ராணுவ அதிகாரி டிசி ராவ் என்பவர் வழக்கு தொடர்ந்துள்ளார். இதை தொடர்ந்து மத்திய அரசின் பாதுகாப்பு அமைச்சகம், இந்திய திரைப்பட தணிக்கை குழுவிற்கு ஒரு கடிதம் அனுப்பி உள்ளது.

அதில் இனி ராணுவ வீரர்களை கதை மாந்தர்களாக சித்தரித்தோ, ராணுவ நிகழ்வுகளை கதை களமாக சித்தரித்தோ எடுக்கப்படும் திரைப்படங்கள், வெப் சீரிஸ்கள் எதுவாக இருந்தாலும் மத்திய அரசின் பாதுகாப்பு அமைச்சகத்துக்கு போட்டுக் காட்டி தடையில்லா சான்று பெற வேண்டும். படம் தணிக்கைக்கு வரும்போதே இதுவும் இணைந்து நடக்க வேண்டும். ராணுவம் பற்றிய தவறான செய்திகள், அவதூறுகளை தடுக்க இந்த நடவடிக்கை கட்டாயமாகிறது என்று அந்த கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.

மூலக்கதை