அஜித்தை விட ஐந்து வயது சிறியவள் நான் : ரசிகருக்கு கஸ்தூரி பதிலடி

தினமலர்  தினமலர்
அஜித்தை விட ஐந்து வயது சிறியவள் நான் : ரசிகருக்கு கஸ்தூரி பதிலடி

சமூக வலைத்தளங்களில் பிரபல நடிகர்களின் ரசிகர்கள் என்று சொல்லிக் கொண்டு ஒரு கூட்டம் எப்போதுமே மற்றவர்களை வம்புக்கு இழுப்பது, வரம்பு மீறி பேசுவது, ஆபாசமாகப் பேசுவது என செய்து கொண்டிருக்கிறது.

சமூக வலைத்தளங்களில் அதிகமாகவே ஆக்டிவ்வாக இருப்பவர் நடிகை கஸ்தூரி. நேற்று ஒரு அஜித் ரசிகர், கஸ்தூரி நடித்த 'சின்னவர்' படத்தில் இடம் பெற்ற 'கொட்டுக்களி கொட்டு' என்ற பாடலின் வீடியோவைப் பதிவிட்டு கஸ்தூரியின் அழகைப் பற்றி தகாத வார்த்தைகளுடன் விமர்சித்திருந்தார்.

அதைப் பார்த்த கஸ்தூரி, “அஜித் கேட்டாரா அவர் பேரை சொல்லிக்கிட்டு அசிங்கமா பேசுங்கன்னு. இதுல காமெடி என்னன்னா, கஸ்தூரி 'கிழவி', அஜித்தை விட ஐந்து வயது இளையவள், ஐயோ, ஐயோ. போயி வேலை இருந்தா பாருங்கடா. உங்களை மாதிரி 'டர்ட்டி அஜித் பேன்ஸ்'னால எல்லா மரியாதையான அஜித் பேன்ஸ்க்கும் சேர்த்து கெட்ட பேரு. அதை புரியு அளவுக்காவது அறிவு இருக்கா இல்லையா.

எல்லார்கிட்டயும் பணிவா கேட்டுக்கிறேன், இதை ஒரு வாய்ப்பா வச்சி மிஸ்டர் அஜித்குமாரை யாரும் தரக்குறைவா பேச வேணாம். அவர் சிறந்த ஜென்டில்மேன், அவரைப் பார்த்து மெச்சுபவள் நான். அவருடைய ரசிகர்கள் என பெருமைப்படுபவர்கள், அவரைப் பெருமைப்படுத்துங்க. சீப்பான செயல்களை செய்யாதீங்க,” எனக் கேட்டுக் கொண்டுள்ளார்.

யார் என்ன சொன்னாலும் சில ரசிகர்கள் எதையும் காதில் வாங்கிக் கொள்ளப்போவதில்லை.

மூலக்கதை