ராகு தரிசனத்திற்குப்பின் நயன்தாரா - விக்னேஷ் சிவன் திருமணம்?

தினமலர்  தினமலர்
ராகு தரிசனத்திற்குப்பின் நயன்தாரா  விக்னேஷ் சிவன் திருமணம்?

அறிவிக்கப்படாத அதேசமயம் அதிகாரபூர்வமான காதல் பறவைகளாக சிறகடித்துப் பறந்த வருகிறார்கள் நயன்தாராவும், இயக்குனர் விக்னேஷ் சிவனும். முக்கியமான பண்டிகை நாட்களில் அல்லது விடுமுறை நாட்களில் இவர்கள் இருவரும் இணைந்து புகைப்படம் வெளியிடுவதை வாடிக்கையாகவே வைத்திருந்தார்கள்.. அந்தவகையில் கடந்த சில மாதங்களுக்கு முன் இவர்கள் இருவரும் அதிகம் காணப்பட்டது வழிபாட்டு தலங்களில் தான்.

அதற்கு காரணமும் இருக்கிறது. ஜாதகம், ஜோதிடத்தில் தீவிர நம்பிக்கை கொண்டவராம் நயன்தாரா. கேரளாவில் உள்ள பிரபல ஜோதிடர் ஒருவரின் ஆலோசனைப்படி திருமண தடைகள் விலகுவதற்காக முக்கியமான கோவில்களுக்கு விக்னேஷ் சிவனுடன் சென்று தரிசனம் செய்து வருகிறாராம்.

அந்தவகையில் இவர்கள் இருவரும் கும்பகோணம் அருகே உள்ள திருநாகேஸ்வரத்தில் அமைந்துள்ள ராகு பகவானை தரிசிக்க வேண்டியது மட்டும் தான் பாக்கியாம். இந்த ஊரடங்கு காரணமாக அது தற்போது தள்ளிப்போய் இருக்கிறது. இல்லாவிட்டால் எப்போதோ தங்களது திருமண அறிவிப்பை வெளியிட்டு இந்நேரம் திருமணமும் முடிந்திருக்கும் என்றும் கூட சொல்கிறார்கள்.

மூலக்கதை