சகோதரத்துவத்தை வலியுறுத்தும் ரக்‌ஷாபந்தன் பண்டிகை: நாட்டு மக்கள் அனைவருக்கும் பிரதமர் மோடி டுவிட்டரில் வாழ்த்து...!!!

தினகரன்  தினகரன்
சகோதரத்துவத்தை வலியுறுத்தும் ரக்‌ஷாபந்தன் பண்டிகை: நாட்டு மக்கள் அனைவருக்கும் பிரதமர் மோடி டுவிட்டரில் வாழ்த்து...!!!

டெல்லி: சகோதரத்துவத்தை வலியுறுத்தும் ரக்‌ஷாபந்தன் பண்டிகை வடமாநிலங்கள் உட்பட பல பகுதிகளிலும் இன்று கொண்டாடப்படுகிறது. பெண்கள் தமது சகோதரர்கள், மற்றும் சகோதரர்களாகக் கருதுவோரின் மணிக்கட்டில் மஞ்சள் நூல் கட்டுவது இப்பண்டிகையின் முக்கிய நிகழ்ச்சி. இதனை ஏற்றுக் கொள்வதன் மூலம் ஓர் ஆண், அந்தச் சகோதரியின் பாதுகாப்பிற்கும், வாழ்க்கை நலத்திற்கும் உறுதுணையாக இருப்பேன் என்று உறுதி கூறுவதாகக் கருதப்படுகிறது. ராக்கி கட்டியவுடன் சகோதரன், அந்த அன்புச் சகோதரிக்கு ஒரு பரிசு (அல்லது பணம்) அளிப்பது வழக்கம். அடிப்படையில் இந்துக்களால் கொண்டாடப்படும் இப்பண்டிகையை மதப் பணடிகை என்பதை விட சமுதாயப் பண்டிகை என்று கூறுவது பொருந்தும். வட இந்தியா மட்டுமின்றி தமிழகத்தில் ரக்ஷா பந்தன் விழா கொண்டாடப்பட்டு வருகிறது. இந்நிலையில் ரக்ஷா பந்தன் பண்டிகையையொட்டி பிரதமர் நரேந்திர மோடி தனது டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்ட வாழ்த்து செய்தியில்,  ரக்‌ஷா பந்தன் திருநாளை முன்னிட்டு நாட்டு மக்கள் அனைவருக்கும் எனது நல்வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன் என பதிவிட்டுள்ளார். மேலும் மரியாதைக்குரிய அமிர்தானந்தமாயி ஜி,உங்கள் சிறப்பு ரக்ஷா பந்தன் வாழ்த்துக்களால் நான் மிகவும் தாழ்மையுடன் இருக்கிறேன். நமது பெரிய தேசத்திற்கு உழைப்பது எனது பாக்கியம். உங்களிடமிருந்தும், இந்தியாவின் நரி சக்தியிலிருந்தும் ஆசீர்வாதம் எனக்கு மிகுந்த பலத்தைத் தருகிறது. இந்தியாவின் வளர்ச்சி மற்றும் முன்னேற்றத்திற்கும் அவை மிக முக்கியமானவை என பதிவிட்டுள்ளார்.

மூலக்கதை