படிவம் 26-ஏ.எஸ்., அளிக்கும் புதிய தகவல்கள்

தினமலர்  தினமலர்
படிவம் 26ஏ.எஸ்., அளிக்கும் புதிய தகவல்கள்

வருமான வரித்துறையால் வரி செலுத்துபவர்களுக்கு வழங்கப்படும் படிவம் 26-ஏ.எஸ்., இந்த ஆண்டு முதல், அதிக பரிவர்த்தனை தொடர்பான தகவலையும் அளிக்க கூடியதாக அமைகிறது.

வருமான வரித்துறையால் வழங்கப்படும் படிவம் 26 – ஏ.எஸ்., வரி பாஸ் புத்தகம் என பிரபலமாக குறிப்பிடப்படுகிறது. வரித்தாக்கல் செய்வதற்கான முக்கிய ஆவணங்களில் ஒன்றாக இது அமைகிறது.வரி செலுத்துபவர்கள் தொடர்பான முக்கிய தகவல்களை இந்த படிவம் கொண்டிருக்கும். வரி செலுத்துபவர் வருமானம் தொடர்பாக பிடித்தம் செய்யப் பட்ட, டி.டீ.எஸ்., வரி விபரங்களும் இதில் இடம்பெற்றிருக்கும்.


அனைத்து வரி செலுத்துபவருக்கும் இந்த படிவம் வழங்கப்படும். வருமான வரி தாக்கல் கணக்கு மூலம் இதை அணுகலாம்.இந்த ஆண்டு முதல் இந்த படிவத்தில், மாறுதல் செய்யப் பட்டு, நிதியாண்டில் மேற்கொள்ளப்பட்ட அதிக மதிப்பிலான பரிவர்த்தனை தகவல்களும் இடம்பெற உள்ளன.


வைப்பு நிதி, கிரெடிட் கார்டு பில் தொகை, மியூச்சுவல் பண்ட் முதலீடு போன்றவை, 10 லட்சத்திற்கு மேல் அமைந்து இருந்தால் அந்த தகவல் படிவத்தில் இடம் பெறும். வரித் தாக்கலில் குறிப்பிட வேண்டிய பரிவர்த்தனைகளை மறக்காமல் இருக்க, இந்த தகவல் உதவியாக இருக்கும்.

மூலக்கதை