5ம் தேதி ராமர் கோயில் பூமி பூஜை ஏற்பாடுகள் ஆய்வு; அயோத்தியில் உ.பி முதல்வர் இன்று முகாம்: காணொலியில் அத்வானி உட்பட தலைவர்கள் பங்கேற்பு

தமிழ் முரசு  தமிழ் முரசு
5ம் தேதி ராமர் கோயில் பூமி பூஜை ஏற்பாடுகள் ஆய்வு; அயோத்தியில் உ.பி முதல்வர் இன்று முகாம்: காணொலியில் அத்வானி உட்பட தலைவர்கள் பங்கேற்பு

அயோத்தி: வரும் 5ம் தேதி அயோத்தியில் ராமர் கோயில் பூமி பூஜை நடைபெற உள்ளதால், பாதுகாப்பு ஏற்பாடுகளை பார்வையிட உ. பி முதல்வர் இன்று உயர்மட்ட ஆலோசனை நடத்துகிறார். காெணாலி மூலம் விழா நிகழ்ச்சிகளில் அத்வானி உள்ளிட்ட தலைவர்கள் பங்கேற்கின்றனர்.


உத்திரபிரதேச மாநிலம் அயோத்தியில் வரும் 5ம் தேதி நடைபெறவுள்ள ராமர் கோயில் பூமி பூஜைக்கான ஏற்பாடுகள் தொடர்ந்து நடந்து வருகின்றன. முன்னதாக கடந்த 31ம் தேதி ராமர் கோயில் விழாவிற்கு யமுனோத்ரி, யமுனை  நதிகளில் இருந்து புனித நீர், இமயமலை பகுதியில் வளரும் பிரம்ம கமல் பூ,  ஆகியவற்றை பூசாரிகள் விஷ்வா இந்து பரிஷத் அலுவலக பொறுப்பாளர்களிடம்  ஒப்படைத்தனர்.

அயோத்தி முழுவதையும் அலங்கரிப்பதற்கான ஏற்பாடுகள்  உத்தரபிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத்தின் மேற்பார்வையில் மேற்கொள்ளப்பட்டு  வருகின்றன.

ராமர் கோயில் பணிகள் குறித்து அம்மாநில முதல்வர் யோகி ஆதித்யநாத் இன்று (ஆக.

2) ஆய்வு மேற்ெகாள்ள ஒரே வாரத்தில் 2வது முறையாக அயோத்திக்கு வந்தார். இதனால் மாநிலத்தின் மதுரா, வாரணாசி, சித்ராகூட், பிரயாக்ராஜ் மற்றும் கோரக்பூர், நைமிசாரண்யம் ஆகிய பல்வேறு இடங்களில் பாதுகாப்பு ஏற்பாடுகள் பலப்படுத்தப்பட்டுள்ளன.

ராமர் கோயிலுக்கு பிரதமர் மோடி அடிக்கல் நாட்ட உள்ளதால் 200 பேர் மட்டுமே அழைக்கப்பட்டுள்ளதாக  உள்ளதாக கூறப்படுகிறது. நேற்றிரவு அயோத்தியின் பல பகுதிகள் மண் விளக்குகள் மற்றும் வண்ணமயமான விளக்குகளால் ஒளிரவிடப்பட்டன.

இந்நிலையில், ராம் ஜன்மபூமி தீர்த்த க்ஷேத்ரா அறக்கட்டளையின் சார்பில், சிறப்பு அழைப்பாளர்களுக்கு மஞ்சள் நிறத்தில் அழைப்புக் கடிதம் அனுப்பப்பட்டு வருகிறது. அதில் பிரதமர் மோடியின் வருகை குறித்த தகவல்களும் இடம்பெற்றுள்ளன.



மேலும், ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பகவத், உ. பி. முன்னாள் முதல்வர் கல்யாண் சிங், பாஜக மூத்த தலைவர் உமா பாரதி, ராம் கோயில் இயக்கத்துடன் தொடர்புடைய சாத்வி ரித்தம்பாரா, பாபர் மஸ்ஜித் உறுப்பினராக இருந்த இக்பால் அன்சாரி, ராஜேந்திரதேவாச்சார்யா ஆகியோர் பெயர்கள் இடம்பெற்றுள்ளன.

பிரதமர் மோடி வரும் 5ம் தேதி காலை 11. 15 மணிக்கு டெல்லியில் இருந்து சிறப்பு விமானம் மூலம் சாகேத் கல்லூரிக்கு வருகிறார். அங்கிருந்து அனுமன் காரி கோயிலுக்குச் சென்றபின், பூமி பூஜை நடைபெறும் இடத்துக்கு நிகழ்ச்சியில் பங்கேற்கிறார்.

அயோத்தியில் சுமார் 2 மணி நேரம் மட்டும் இருக்கும் பிரதமர் மோடி, அதன்பின்னர் டெல்லிக்கு புறப்பட்டு செல்கிறார். பாஜக மூத்த தலைவர்கள் அத்வானி மற்றும் முரளி மனோகர் ஜோஷி ஆகியோர் விழாவில் நேரடியாக பங்கேற்கவில்லை.

அதேநேரத்தில், இரு தலைவர்களும் வீடியோ கான்பரன்சிங் மூலம் விழாவில் கலந்து கொள்வார்கள் என்று தகவல்கள் தெரிவித்தன.

.

மூலக்கதை