கடலூர் அருகே பயங்கரம்; மாஜி பஞ். தலைவரின் தம்பி படுகொலை: 25 படகுகளுக்கு தீ வைப்பு

தமிழ் முரசு  தமிழ் முரசு
கடலூர் அருகே பயங்கரம்; மாஜி பஞ். தலைவரின் தம்பி படுகொலை: 25 படகுகளுக்கு தீ வைப்பு

கடலூர்: கடலூர் அருகே முன்னாள் பஞ்சாயத்து தலைவரின் தம்பி வெட்டி படுகொலை செய்யப்பட்டார். இதையடுத்து, அப்பகுதியில் இருந்த 25 படகுகள் தீ வைத்து எரிக்கப்பட்டது.

மேலும், வீடுகள், பைக்குகள் சேதப்படுத்தப்பட்டது. அப்பகுதியில் பதற்றம் நிலவுவதால் போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.

கடலூர் அடுத்த தாழங்குடா மாரியம்மன் கோயில் தெருவை சேர்ந்தவர் மாசிலாமணி. இவர் குண்டு உப்பலவாடி முன்னாள் பஞ்சாயத்து தலைவராக இருந்தார்.

இவரது தம்பி மதிவாணன்(36). இவர் நேற்று இரவு சொந்த வேலையாக வௌியூர் சென்று விட்டு பைக்கில் ஊர் திரும்பி கொண்டு இருந்தார்.

அப்போது, அவரை பின்தொடர்ந்து ஒரு கும்பல் வந்துள்ளது.

இதை கண்ட அவர் பைக்கை நிறுத்தி நீங்கள் யார், எதற்காக என்னை பின்தொடர்ந்து வருகிறீர்கள்? என கேட்டுள்ளனர்.

அப்போது, அந்த கும்பல் திடீரென அவர்கள் மறைத்து வைத்திருந்த கத்தி உள்ளிட்ட ஆயுதங்களால் கொலை செய்ய முயன்றனர். இதனால், அதிர்ச்சியடைந்த மதிவாணன் அவர்களிடம் இருந்து தப்பியோடினார்.

இதையடுத்து, அந்த கும்பல் அவரை விரட்டி சென்று சரமாரியாக கழுத்து, தலை உள்ளிட்ட பகுதிகளில் வெட்டி விட்டு அங்கிருந்து தப்பி சென்றது. இதில், ரத்த வெள்ளத்தில் மதிவாணன் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார்.

இதுகுறித்த தகவலின் பேரில், சம்பவ இடத்திற்கு சென்ற கடலூர் புதுநகர் போலீசார் மதிவாணன் உடலை கைப்பற்றி விசாரித்து வருகின்றனர். இச்சம்பவம் அப்பகுதியில் பதற்றத்தை ஏற்படுத்தி உள்ளது.



மேலும், மாசிலாமணி தரப்பினருக்கும், தற்போது, பஞ்சாயத்து தலைவராக உள்ள மதியழகன் மனைவி சாந்தி தரப்பினருக்கும் தேர்தல் தொடர்பாக முன்விரோதம் இருந்ததுள்ளது. இதனால், கொலை நடந்து இருக்கலாம் என கூறப்படுகிறது.

இந்நிலையில், கடற்கரை பகுதியில் நிறுத்தப் பட்டிருந்த 25 படகுகளுக்கு தீ வைக்கப்பட்டது. மேலும், அப்பகுதியில் இருந்த 6 வீடுகள், பைக்குகள் உள்ளிட்டவை சேதப்படுத்தப்பட்டது.

கொலை ெதாடர்பாக அப்பகுதியை சேர்ந்த 30 பேரை பிடித்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். இச்சம்பவத்தால் அப்பகுதியில் பதற்றம் நிலவுகிறது.

போலீசார் குவிக்கப்பட்டுள்ளளனர்.

.

மூலக்கதை