ஈரான் குற்றச்சாட்டு..! தேவைக்கேற்ப பயங்கரவாதிகளைப் பயன்படுத்துகிறதா அமெரிக்கா?

தினமலர்  தினமலர்
ஈரான் குற்றச்சாட்டு..! தேவைக்கேற்ப பயங்கரவாதிகளைப் பயன்படுத்துகிறதா அமெரிக்கா?

டெஹ்ரான்: கடந்த 2008-ம் ஆண்டு ஈரானின் ஷிராஸ் நகரில் வெடிகுண்டுத் தாக்குதல் நடத்திய அமெரிக்க பயங்கரவாத அமைப்பை கைது செய்துள்ளதாக ஈரான் அரசு அறிவித்துள்ளது. ஜம்ஷிட் ஷர்ம்ஹாட் ஈரான் நாட்டில் பயங்கரவாத செயல்களை ஈடுபட்டு வந்த பயங்கரவாதி அவர்.


இவரது நடவடிக்கைகள் குறித்து சமீபகாலங்களில் ஈரான் உளவுத்துறை ஆராய்ந்து வந்தது.'கிங்டம் அசம்பிளி ஆஃப் ஈரான்' என்னும் இவரது அமைப்பு தொடர்ந்து ஈரான் அரசுக்கு எதிராகப் போராடிவந்தது. ஈரானுக்கும் அமெரிக்காவுக்கும் கச்சா எண்ணெய் வர்த்தகத்தில் அடிக்கடி மோதல் ஏற்படும். சமீபத்தில் ஈரான் புரட்சிகர ராணுவ படை தளபதி குவஸிம் சுலைமானி அமெரிக்காவால் கொல்லப்பட்டபோது அமெரிக்காவுக்கும் ஈரானுக்கும் மோதல் ஏற்பட்டது.

இதனைதொடர்ந்து தற்போது ஈரானில் உள்நாட்டு கலவரத்தை தூண்டும் விதத்தில் இந்த பயங்கரவாத அமைப்புக்கு ஆதரவு அளித்து வந்த அமெரிக்காவுக்கு தாங்கள் கடும் கண்டனங்களை ஈரான் தெரிவிப்பதாக கூறியுள்ளது.

கடந்த 2018-ம் ஆண்டு ஏப்ரல் 12ஆம் தேதி ஜாம்ஷிட் நடத்திய தாக்குதலில் ஷிராஸ் மசூதியில் 14 பேர் கொல்லப்பட்டனர். 215 பேர் காயமடைந்தனர். இதனைத்தொடர்ந்து 2009-ம் ஆண்டு இந்த வழக்கில் தொடர்புடைய மூவர் தூக்கிலிடப்பட்டனர். அப்போது ஈரான் உளவுத்துறை விசாரித்ததில் அமெரிக்காவில் செயல்படும் சிஐஏ ஏஜென்ட்கள் இருவரிடம் இருந்து தங்களுக்கு நிதி கிடைப்பதாக இந்த பயங்கரவாத அமைப்பு தெரிவித்திருந்தது.


ஈரான் தலைநகர் டெஹ்ரானில் சயனைட் குண்டு வைக்க அமெரிக்காவின் உதவியுடன் இந்த பயங்கரவாத அமைப்பு முயன்றதாக ஈரான் குற்றம் சாட்டுகிறது. ஈரானில் ஏற்கனவே அரசுக்கு எதிராக புரட்சிகர ராணுவப்படை ஆக்கிரமிக்க போர்புரிந்து வரும் வேளையில் அமெரிக்காவும் அவ்வப்போது ஈரான் உள்நாட்டு கலவரத்தை தூண்ட இதுபோல மறைமுகமாக ஐநா நிபந்தனைகளை மீறி செயல்படுவதாக ஈரான் குற்றம் சாட்டியுள்ளது.

மேலும் தங்களுக்குத் தேவைப்படும்போது தீவிரவாதிகளுக்கு நிதி அளித்து தங்களது தேவை நிறைவடைந்தவுடன் தீவிரவாதிகளை எதிர்ப்பது அமெரிக்காவுக்கு வாடிக்கையாகிவிட்டது என ஈரான் குற்றஞ்சாட்டி உள்ளது.

மூலக்கதை