கார்கில் போரில் ஈடுபட 'கவுன்டி' ஒப்பந்தத்தை ரத்து செய்தேன்: அக்தர்

தினமலர்  தினமலர்
கார்கில் போரில் ஈடுபட கவுன்டி ஒப்பந்தத்தை ரத்து செய்தேன்: அக்தர்

இஸ்லாமாபாத்: இந்தியாவுடனான கார்கில் போரில் கலந்து கொள்வதற்காக 1.71 கோடி ரூபாய் மதிப்பிலான கவுண்டி ஒப்பந்தத்தை ரத்து செய்ததாக, பாகிஸ்தான் முன்னாள் வேகப்பந்து வீச்சாளர் சோயப் அக்தர் பேசியது சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.

இந்தியா - பாகிஸ்தான் நாடுகளுக்கு இடையே 1999 மே - ஜூலை மாதங்களில் கார்கில் போர் நடந்தது. இதில் இந்தியா வெற்றி வாகை சூடியது. போர் நடந்து முடிந்து 20 ஆண்டுகளுக்கு பின், கார்கில் போரில் தனது நாட்டுக்காக போரிட தயாராக இருந்ததாக, பாகிஸ்தான் முன்னாள் வேகப்பந்து வீச்சாளர் அக்தர் கூறியிருப்பது சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.

இதுகுறித்து அவர் கூறியதாவது: கவுன்டி அணியான நாட்டிங்ஹாமுடன் 1,75,000 பவுண்டுகள் (இந்திய மதிப்பில் சுமார் 1.71 கோடி ரூபாய்) ஒப்பந்தம் செய்திருந்தேன். 2002ல் மற்றொரு பெரிய அணியுடன் ஒப்பந்தம் செய்திருந்தேன். கார்கில் போர் நடந்ததால், நான் இரண்டையும் ரத்து செய்தேன். லாகூருக்கு வெளியே நான் நின்றிருந்த போது, ராணுவ ஜெனரல் ஒருவர் என்ன செய்கிறாய் என என்னிடம் கேட்டார். போர் துவங்கப்போகிறது; நாம் அனைவரும் சேர்ந்தே இறப்போம் நான் அவரிடம் கூறினேன்.


நான் இரு முறை கவுன்டி கிரிக்கெட் போட்டிகளை நிராகரித்ததால், கவுன்டி அணிகள் அதிர்ச்சி அடைந்தன. எனக்கு அதைப்பற்றி கவலையில்லை. காஷ்மீரில் இருக்கும் எனது நண்பர்களை அழைத்து, நான் போராட தயாராக இருக்கிறேன் என கூறினேன்.

இந்தியாவில் இருந்து வந்த விமானங்கள், எங்களது 6 - 7 மரங்களை சாய்த்தது, எங்களுக்கு பெரும் இழப்பாக அமைந்தது. நான் என் மனம் மிகவும் புண்பட்டது. இப்போது நாங்கள் மரங்கள் மீது அதிக கவனம் செலுத்தி வருகிறோம். அன்று நான் கண்விழித்து பார்த்த போது, எனக்கு மயக்கம் வந்து விட்டது. என் மனைவி அமைதியாக இருக்கும்படி என்னிடம் கூறினார். மறுநாள் செய்தியை பார்க்கும் வரை எனக்கு அது தொடர்ந்தது. இவ்வாறு அவர் கூறினார். கார்கில் போர் முடிந்து 20 ஆண்டுகளுக்கு பின், போர் குறித்து அவர் பேசியது சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.

மூலக்கதை