அன்னிய செலாவணி இருப்பு: தங்கத்தின் மதிப்பால் உயர்வு

தினமலர்  தினமலர்
அன்னிய செலாவணி இருப்பு: தங்கத்தின் மதிப்பால் உயர்வு

மும்பை:நாட்­டின் அன்­னிய செலா­வணி இருப்பு, தொடர்ந்து ஒவ்­வொரு வார­மும் அதி­க­ரித்து வரு­கிறது.

கடந்த 24ம் தேதி­யு­டன் முடி­வ­டைந்த வாரத்­தில், அன்­னிய செலா­வணி இருப்பு, 499 கோடி டாலர், அதா­வது, 37 ஆயி­ரத்து, 425 கோடி ரூபாய் உயர்ந்து, 52 ஆயி­ரத்து, 263 கோடி டால­ராக அதி­க­ரித்­துள்­ளது. இது, தற்­போ­தைய இந்­திய மதிப்­பில், கிட்­டத்­தட்ட, 39.20 லட்­சம் கோடி ரூபாய் ஆகும்.

இதை­ய­டுத்து, அன்­னிய செலா­வணி இருப்பு புதிய உச்­சத்தை தொட்டு சாதனை படைத்­துள்­ளது. இதற்கு இருப்­பில் உள்ள தங்­கத்­தின் மதிப்பு அதி­க­ரித்­தது முக்­கிய கார­ணங்­களில் ஒன்­றா­கும். இதற்கு முந்­தைய வாரத்­தில், அதா­வது, ஜூலை 17ம் தேதி­யு­டன் முடி­வ­டைந்த வாரத்­தில், இருப்பு, 9,563 கோடி ரூபாய் அதி­க­ரித்து, 51 ஆயி­ரத்து, 764 கோடி டால­ராக உயர்ந்து இருந்­தது. இந்­திய மதிப்­பில் இது, 38.82 லட்­சம் கோடி ரூபாய்.

கடந்த ஜூன் 5ம் தேதி­யு­டன் முடி­வ­டைந்த வாரத்­தில், அன்­னிய செலா­வணி இருப்­பா­னது, அரை லட்­சம் கோடி டாலர் என்ற நிலையை, முதல் முறை­யாக தாண்­டி­யது. அதா­வது, 50 ஆயி­ரத்து, 170 கோடி டாலர் என்ற நிலையை எட்­டி­யது. மதிப்­பீட்டு வாரத்­தில், வெளி­நாட்டு நாணய சொத்து மதிப்பு, 360 கோடி டாலர் அதி­க­ரித்து, 48 ஆயி­ரத்து, 48 கோடி டால­ராக உயர்ந்­துள்­ளது.மேலும், தங்­கத்­தின் இருப்பு மதிப்பு, 1.36 கோடி டாலர் அதி­க­ரித்து, 3,610 கோடி டால­ராக அதி­க­ரித்­துள்­ளது. இந்­திய மதிப்­பில் இது, 2.71 லட்­சம் கோடி ரூபாய்.இவ்­வாறு ரிசர்வ் வங்கி தெரி­வித்துள்­ளது.

மூலக்கதை