பிரீமியம் ஸ்மார்ட்போன் விற்பனை 30 சதவீதம் அளவுக்கு சரிவு

தினமலர்  தினமலர்
பிரீமியம் ஸ்மார்ட்போன் விற்பனை 30 சதவீதம் அளவுக்கு சரிவு

புது­டில்லி: கடந்த ஜூன் மாதத்­து­டன் முடி­வ­டைந்த காலாண்­டில், நாட்­டின் பிரீ­மி­யம் ஸ்மார்ட்­போன் விற்­பனை, 30 சத­வீ­தம் அள­வுக்கு சரி­வைக் கண்­டுள்­ளது.

கொரோனா தொற்று பர­வல் கார­ண­மாக வினி­யோ­கத்­தில் ஏற்­பட்ட சிக்­கல்­க­ளால், நாட்­டின் பிரீ­மி­யம் ஸ்மார்ட்­போன் விற்­பனை, முதல் காலாண்­டில், 30 சத­வீ­தம் அள­வுக்கு சரிந்­துள்­ள­தாக, கவுன்­டர்­பா­யின்ட் ஆய்­வ­றிக்கை தெரி­வித்­து உள்­ளது.ரீ­மி­யம் ஸ்மார்ட்­போன் பிரிவு என்­பது, 30 ஆயி­ரம் ரூபாய்க்கு அதி­க­மான விலை கொண்ட ஸ்மார்ட்­போன்­க­ளின் பிரி­வா­கும்.

இது குறித்து, ஆய்­வ­றிக்­கை­யில் மேலும் தெரி­விக்­கப்­பட்­டுள்­ள­தா­வது:நாடு முடக்­கப்­பட்­டதை தொடர்ந்து, கடந்த ஏப்­ரல் மாதத்­தில், விற்­பனை கிட்­டத்­தட்ட பூஜ்­ஜி­யம் என்ற நிலைக்கு வந்­த­தால், முதல் காலாண்­டில் இத்­த­கைய சரிவை சந்­திக்க நேர்ந்­துள்­ளது.இருப்­பி­னும் கூட, பிரீ­மி­யம் ஸ்மார்ட்­போன் துறை மிக­வும் குறை­வான பாதிப்­பையே சந்­தித்­துள்­ளது. ஆப்­பிள் மற்­றும் ஒன்­பி­ளஸ் நிறு­வ­னங்­க­ளின் அறி­மு­கங்­கள், இந்த சந்­தையை உயி­ரோட்­ட­மாக வைத்­துக் கொள்ள உதவி செய்­துள்­ளன.

அது­மட்­டு­மின்றி, விற்­ப­னை­யா­ளர்­கள் அல்ட்ரா பிரீ­மி­யம் ஸ்மார்ட்­போன் சந்­தை­யில் அதிக கவ­னத்தை செலுத்தி இருக்­கி­றார்­கள்.இதற்கு முக்­கிய கார­ணம், நல்ல லாபம் மற்­றும் பிராண்­டு­களை அதி­க­ரித்­துக்­கொள்­வது ஆகி­ய­வையே.ஒன்­பி­ளஸ் நிறு­வ­னம், பிரீ­மி­யம் ஸ்மார்ட்­போன் சந்­தை­யில் தொடர்ந்து முத­லி­டத்தை தக்க வைத்­துக் கொண்­டி­ருக்­கிறது. இந்த பிரி­வில் இந்­நி­று­வ­னத்­தின் சந்தை பங்­க­ளிப்பு, 29 சத­வீ­த­மா­கும்.

ஒன்­பி­ளஸ் நிறு­வ­னத்தை தொடர்ந்து, சாம்­சங் இரண்­டா­வது இடத்­தி­லும், ஆப்­பிள் மூன்­றா­வது இடத்­தி­லும் உள்­ளது.தற்­போது, 5ஜி தொழில்­நுட்­பம் அறி­மு­கம் ஆகும் நிலை­யில், அத்­த­கைய போன்­கள் அல்ட்ரா பிரீ­மி­யம் ஸ்மார்ட்­போன்­க­ளாக கரு­தப்­ப­டு­கின்றன.சயோமி, ஒப்போ, விவோ ஆகிய நிறு­வ­னங்­கள் இந்த பிரி­வி­லும் நுழைந்­துள்­ளன.இவ்­வாறு அறிக்­கை­யில் தெரி­விக்­கப்­பட்­டுள்­ளது.

மூலக்கதை