100 மில்லியன் கிளப்பில் இணைந்த 'நானும் நீயும்' பாடல்

தினமலர்  தினமலர்
100 மில்லியன் கிளப்பில் இணைந்த நானும் நீயும் பாடல்

ஒவ்வொரு வருடத்திலும் பல படங்கள், பல பாடல்கள், ஆனால் ஒரு சில பாடல்கள் தான் ரசிகர்களின் மனதை அதிகம் கவர்கின்றன. முன்பெல்லாம் எந்தப் பாட்டை ரேடியோவில் அதிகம் ஒலிபரப்புவார்களோ, டிவியில் ஒளிபரப்புவார்களோ அந்தப் பாடல் தான் சூப்பர் ஹிட் பாடல் என்ற ஒரு வரையறை இருந்தது. ஆனால், இந்த டிஜிட்டல் யுகத்தில் யு டியுபில் எந்தப் பாடல் அதிகம் பார்வைகளைப் பெறுகிறது என்பதுதான் ஒரு பாடலின் சூப்பர் ஹிட் என்ற வரையறையாக மாறிவிட்டது.

தமிழ்த் திரைப்படப் பாடல்களில் 14 பாடல்கள் தான் யு டியூபில் 100 மில்லியன் பார்வைகளைக் கடந்துள்ளன. அந்த வரிசையில் தற்போது 15வது பாடலாக 'இமைக்கா நொடிகள்' படத்தில் இடம் பெற்ற 'நீயும் நானும் அன்பே..' பாடல் 100 மில்லியனைத் தொட்டுள்ளது.

ஹிப்ஹாப் தமிழா இசையில் கபிலன் எழுத ரகு தீட்சித், சத்யபிரகாஷ், ஜித்தின் இப்பாடலைப் பாடியுள்ளார்கள். ஹிப்ஹாப் தமிழா இசையமைத்த பாடல்களில் இந்தப் பாடல்தான் நல்ல மெலடி ரகமாக இருக்கும். அதுவே இப்பாடல் இந்த அளவிற்கு பார்வைகளைப் பெறக் காரணமாக அமைந்துள்ளது. அவரது இசையில் வெளிவந்த பாடல் ஒன்று 100 மில்லியனைத் தொடுவது இதுவே முதல் முறை என்பது குறிப்பிட வேண்டிய ஒன்று.

மூலக்கதை