தமிழ் சினிமாவில் 2 புதிய சங்கங்கள் - பொறுப்பாளர்கள் யார்?

தினமலர்  தினமலர்
தமிழ் சினிமாவில் 2 புதிய சங்கங்கள்  பொறுப்பாளர்கள் யார்?

தமிழ் சினிமாவில் ஏற்கெனவே தயாரிப்பாளர் சங்கம் உள்ளது. இதில் பல ஆண்டுகளுக்கு முன்பு படம் தயாரித்தவர்கள், ஒரு படம் தயாரித்தவர்கள்கூட உறுப்பினர்களாக உள்ளனர். தற்போது படம் எடுக்கும் தயாரிப்பாளர்களின் எண்ணிக்கை குறைவு. ஆனால் அவர்கள்தான் நடைமுறை பிரச்சினைகளை எதிர்கொள்கிறார்கள்.

இதனால் தற்போது படம் எடுத்துக் கொண்டிருக்கும் தயாரிப்பாளர்கள் இணைந்து நடப்பு தயாரிப்பாளர் சங்கம் என்ற பெயரில் ஒரு சங்கத்தை உருவாக்கி இருக்கிறார்கள். இதன் தலைவராக பாரதிராஜாவும், துணை தலைவர்களாக தனஞ்செயன், எஸ்.ஆர்.பிரபு ஆகியோரும், டி.சிவா பொதுச் செயலாளராகவும், சத்யஜோதி தியாகராஜன் பொருளாளராகவும் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர்.

இது தவிர தென்னிந்திய திரைப்பட வர்த்தக சபை இருப்பது போன்று தமிழ் திரைப்பட வர்த்தக சபை என்ற புதிய சங்கமும் தொடங்கப்படுகிறது. இந்த இரண்டு சங்கங்களையும் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி ஆடி 18 அன்று துவக்கி வைக்கிறார்.

மூலக்கதை