கார் விபத்தில் கன்னட நடிகை படுகாயம்

தினமலர்  தினமலர்
கார் விபத்தில் கன்னட நடிகை படுகாயம்

பிரபல கன்னட நடிகை ரோஹினி சிங். இவர் கன்னட இயக்குனர், தயாரிப்பாளர் ராஜேந்திர சிங் பாபுவின் மகள். கண்டீவீரா என்ற கன்னட படத்தில் துனியா விஜய் ஜோடியாக அறிமுகமானார். தொடர்ந்து கல்லா மல்லா, பெங்கி பிருகாலி, சுதீப்புடன் மாணிக்யா உள்பட பல படங்களில் நடித்துள்ளார். பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டார்.

நேற்று முன்தினம் கன்னட நடிகர் ஜக் ஜக்தீஷின் மகளின் பிறந்தநாள் நிகழ்ச்சியில் கலந்து கொண்டுவிட்டு தனது காரில் வீட்டுக்கு திரும்பிக்கொண்டு இருந்தார். காரில் நடிகர் ஜக்தீஷின் இன்னொரு மகள் அர்பிதாவும் இருந்தார். காரை ரோஹினி சிங்கின் நண்பர் ஓட்டினார்.

கார் எலஹங்கா மவல்லிபுரா சாலையில் வேகமாக வந்தபோது கட்டுப்பாட்டை இழந்து ரோட்டு ஓரத்தில் நின்ற மரம் மீது பயங்கரமாக மோதியது. இதில் காரின் முன்பகுதி நொறுங்கியது. இந்த விபத்தில் காரில் இருந்த ரோஹினி சிங் உள்பட 3 பேருக்கும் படுகாயம் ஏற்பட்டது. அக்கம்பக்கத்தினர் மீட்டு அருகில் உள்ள அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர்.

பின்னர் ரோஹினி சிங் தனியார் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். அவருக்கு கை, கால்களில் எலும்பு முறிவு ஏற்பட்டு உள்ளது. இதுகுறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

மூலக்கதை