வீரப்பன் கதைக்கு காப்பி ரைட்: தயாரிப்பாளர் அறிவிப்பு

தினமலர்  தினமலர்
வீரப்பன் கதைக்கு காப்பி ரைட்: தயாரிப்பாளர் அறிவிப்பு

சந்தன கடத்தல் வீரப்பனைப் பற்றி முன்னாள் ஏடிஜிபி விஜயகுமார் ஐ.பி.எஸ். எழுதியிருக்கும் புத்தகத்தை அடிப்படையாகக் கொண்டு, வெப் சீரிஸ் மற்றும் ஓடிடி தளங்களில் படைப்புகளை உருவாக்கும் பணியில் இ4 என்டர்டெயின்மென்ட் நிறுவனம் இறங்கி உள்ளது.

இதுகுறித்து இந்த நிறுவனத்தின் தயாரிப்பாளர் முகேஷ் மேத்தா வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: எங்கள் மீது நம்பிக்கை வைத்து, தம்முடைய புத்தகத்தின் அடிப்படையில் திரைப்படம் தயாரிக்க அனுமதி அளித்ததற்காக, தற்போது மத்திய அரசு உள்துறை அமைச்சகத்தில் மூத்த பாதுகாப்பு ஆலோசகராக இருக்கும் விஜயகுமார் அவர்களுக்கு எமது நன்றியைத் தெரிவித்துக்கொள்கிறோம்.

இந்தப் படைப்புகளில் பணியாற்றும் நடிகர்கள், கலைஞர்கள் மற்றும் தொழில்நுட்ப உதவியாளர்கள் பற்றிய விவரங்கள், ஊரடங்கு முடிந்ததும் வெளியிடப்படும். விஜயகுமாரின் புத்தகத்தில் அவர் எழுதியுள்ள வீரப்பன் தொடர்பான சம்பவங்கள் காப்புரிமைக்கு உட்பட்டவையாகும். வேறு யாரும் அதை பயன்படுத்தினால் அவர்கள் மீது சட்ட நடவடிக்கைகள் எடுக்கப்படும். என்று அந்த அறிக்கையில் தெரிவித்திருக்கிறார்.

வீரப்பன் கதையை வனயுத்தம் என்ற பெயரில் இயக்கிய கன்னட இயக்குனர் ஏ.எம்.ஆர்.ரமேஷ் தற்போது வெப் சீரிசாக இயக்குகிறார். இதில் வீரப்பன் கேரக்டரில் ஆடுகளம் கிஷோர் நடிக்கிறார்.

மூலக்கதை