தீபிகா படுகோனே மீது முன்னாள் உளவுத்துறை அதிகாரி குற்றச்சாட்டு

தினமலர்  தினமலர்
தீபிகா படுகோனே மீது முன்னாள் உளவுத்துறை அதிகாரி குற்றச்சாட்டு

கொரோனா தாக்கம், ஊரடங்கு, இளம் நடிகர்கள் தற்கொலை என கதிகலங்கி கிடக்கும் பாலிவுட்டில் தற்போது தீபிகா படுகோனே குறித்து முன்னாள் உளவுத்துறை அதிகாரி என்.கே.சூட் என்பவர் கூறியுள்ள விஷயம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கடந்த ஜனவரி மாதம் இந்திய குடியுரிமை சட்ட திருத்தத்தை அமல்படுத்த கூடாது என டில்லி ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழக மாணவர்கள் போராட்டம் நடத்தினார்கள். இந்த போராட்டத்தில் ஈடுபட்ட மாணவர்களை உற்சாகப்படுத்தும் விதமாக அவர்களை நேரிலேயே சந்தித்து ஆதரவளித்தார் நடிகை தீபிகா படுகோனே..ஆனால் தனது பத்மாவதி படத்திற்கு எழுந்த எதிர்ப்பை சமாளிக்க ஆதரவு திரட்டத்தான் அவர் மாணவர்களை சந்தித்து ஸ்டண்ட் அடித்தார் என அப்போது சொல்லப்பட்டது.

ஆனால் இப்படி போராட்டத்தில் ஈடுபட்ட மாணவர்களை சந்தித்து அவர்களை தூண்டிவிடும்படி தீபிகாவுக்கு, பாகிஸ்தான் தொழிலதிபர் அனில் முஸாரத் என்பவர் 5 கோடி பணம் கொடுத்ததாக கூறி தற்போது பரபரப்பை கிளப்பியுள்ளார் அந்த முன்னாள் உளவுத்துறை அதிகாரி. அந்த தொழிலதிபர் பாகிஸ்தான் பிரதமருக்கு மிகவும் நெருங்கிய நண்பர் என்றும் கூறியுள்ள அந்த அதிகாரி, அமலாக்க இயக்குனரகம் ஏற்கனவே இதுகுறித்து விசாரித்துக்கொண்டு இருக்கிறது என்றும் குறிப்பிட்டுள்ளார்.

மூலக்கதை