ராம்கோபால் வர்மாவுக்கு ஆதரவாக பிரகாஷ்ராஜ் வாய்ஸ்

தினமலர்  தினமலர்
ராம்கோபால் வர்மாவுக்கு ஆதரவாக பிரகாஷ்ராஜ் வாய்ஸ்

ராம்கோபால் வர்மா டைரக்சனில் கிட்டத்தட்ட ஒரு குறும்பட ரேஞ்சுக்கு சமீபத்தில் வெளியாகியுள்ளது பவர்ஸ்டார் என்கிற படம். இது நடிகர் பவன் கல்யாணின் புகழை களங்கப்படுத்தும் விதமாக எடுக்கப்பட்டுள்ளதாக அவரது ரசிகர்கள் கொந்தளித்தார்கள்.. அதனால் இந்தப்படத்தை புறக்கணிக்கவும் செய்தார்கள்.. ஆனாலும் ராம்கோபால் வர்மாவுக்கு இந்தப்படம் எதிர்பார்த்த வருமானத்தை குறைவில்லாமல் தந்துகொண்டுதான் இருக்கிறது.

இந்தநிலையில் சமீபத்தில் நடிகர் பிரகாஷ்ராஜிடம் ராம்கோபால் வர்மா மற்றும் பவர்ஸ்டார் படம் குறித்து கேட்கப்பட்டது. அதற்கு பதிலளித்த பிரகாஷ்ராஜ், “ராம்கோபால் வர்மா ஒரு ஸ்பெஷல் மனிதர். தனித்துவமான படங்களை கொடுப்பதில் வல்லவர். அவர் படங்களை பார்ப்பதில் உங்களுக்கு ஏதாவது பிரச்சனை இருக்கிறது என்றால், ஏன் பார்க்கிறீர்கள்.. ஜஸ்ட், அதை தவிர்த்து விட்டு போய்விடலாமே” என வர்மாவுக்கு ஆதரவாக வாய்ஸ் கொடுத்துள்ளார்.

மூலக்கதை