சுஷாந்த்-ரியா பற்றி சேகர் சுமன் கூறும் ஆச்சர்ய தகவல்

தினமலர்  தினமலர்
சுஷாந்த்ரியா பற்றி சேகர் சுமன் கூறும் ஆச்சர்ய தகவல்

சுஷாந்த் சிங் ராஜ்புட் தற்கொலை செய்துகொண்டு மரணத்தை தழுவியதில் அவரது காதலி ரியா சக்கரபோர்த்திக்கு முக்கிய பங்கு இருக்கிறது என சுஷாந்தின் தந்தை போலீஸில் புகார் அளித்துள்ளார். அவர் மட்டுமல்ல, சுஷாந்தின் ரசிகர்களின் கோரிக்கையும் கூட அதுதான். இவர்களை போலவே சுஷாந்தின் மரணத்தில் ரியாவுக்கு பங்கு உண்டு என குற்றம் சாட்டி வருபவர் பாலிவுட் காமெடி நடிகரும், இயக்குனருமான சேகர் சுமன்.. ரியா பற்றிய ஒரு ஆச்சர்யமான கோ-இன்சிடன்ட் ஒன்றை தற்போது பகிர்ந்துள்ளார்.

கடந்த 2014-லில் ஹார்ட்லெஸ் என்கிற படத்தை இயக்கினார் சேகர் சுமன். பணத்திற்காக தனது காதலனை ஏமாற்றி அவனை கொலை செய்கிறாள் காதலி. இதுதான் அந்தப்படத்தின் கதை.. இந்தப்படத்தில் அந்த காதலியின் கதாபாத்திர பெயர் ரியா.. அதுமட்டுமல்ல அந்த ரியா கதாபாத்திரத்தில் நடிப்பதற்காக அந்தப்படத்தின் ஆடிசனில் சுஷாந்தின் காதலியான ரியாவும் கலந்து கொண்டாராம். இந்த தகவல்களை கூறியுள்ள சேகர் சுமன், என் படத்தில் நடந்தது எல்லாம் இப்போது நிஜத்திலேயே நடக்கிறது என்றும் கூறியுள்ளார்,.

மூலக்கதை