ஆன்லைனில் ஷோபனாவின் கிருஷ்ணாவதாரம்

தினமலர்  தினமலர்
ஆன்லைனில் ஷோபனாவின் கிருஷ்ணாவதாரம்

ஊரடங்கு காரணமாக தியேட்டர்கள் இன்னும் திறக்கப்படாததால் திரையுலகை சேர்ந்தவர்கள் தங்கள் படங்களை டிஜிட்டலில் வெளியிட்டு வருகிறார்கள்.. அந்தவகையில் நடனத்திற்காக மேடை நிகழ்ச்சிகள் நடத்தி வந்த நடிகை ஷோபனாவும் தற்போது டிஜிட்டல் வடிவத்திற்கு மாறுகிறார். கடந்த பதினைந்து வருடங்களாக வருடந்தோறும் ஜென்மாஷ்டமி தினத்தன்று மேடையில் புதுப்புது நிகழ்ச்சிகளை விமரிசையாக அரங்கேற்றுவதை வழக்கமாக வைத்துள்ளார் ஷோபனா.

ஆனால் இந்தமுறை ஊரடங்கு காரணமாக மேடை நிகழ்ச்சி நடத்த வாய்ப்பு இல்லாததால், ஆன்லைன் மூலம் இந்த நிகழ்ச்சியை நடத்த இருக்கிறாராம். கிருஷ்ணா என்கிற கான்செப்ட்டை வைத்து இவர் நடத்தும் இந்த நிகழ்ச்சியில், நடனம் வடிவமைத்து கிருஷ்ணராக நடிப்பதுடன் இவரே இந்த நிகழ்ச்சியை இயக்கவும் உள்ளார்.. வரும் ஆக-11 மற்றும் 12 தேதிகளில் இரவு 7 மணிக்கு புக் மை ஷோ மூலமாக இந்த நிகழ்ச்சி ஒளிபரப்பாக இருக்கிறதாம்.. பிரபல நட்சத்திரங்கள் பலரும் இந்த நிகழ்ச்சிக்கு வாய்ஸ் ஓவர் கொடுத்துள்ளர்களாம்.

மூலக்கதை