நான் பாடும் பாடல் : அனுபமா வேண்டுகோள்

தினமலர்  தினமலர்
நான் பாடும் பாடல் : அனுபமா வேண்டுகோள்

சமீபகாலமாக பட தயாரிப்பிலும் கால் வைத்துள்ள நடிகர் துல்கர் சல்மான். தன்னுடன் பல படங்களில் காமெடி நடிகராக இணைந்து நடித்த ஜேக்கப் கிரிகோரி என்பவரை கதாநாயகனாக வைத்து 'மணியறையில் அசோகன்' என்கிற படத்தை தயாரித்து முடித்துவிட்டார்.. இந்த படத்தை சம்சு சைபா என்பவர் இயக்கியுள்ளார். கதாநாயகிகளாக அனுபமா பரமேஸ்வரன், நிகிலா விமல், மற்றும் அனு சித்தாரா என மூன்று பேர் நடிக்கின்றனர். சமீபத்தில் இந்தப்படத்திற்காக துல்கர் சல்மானும் படத்தின் ஹீரோ ஜேக்கப் கிரிகோரியும் இணைந்து பாடிய உன்னிமாயா என்கிற ஒரு பாடல் ஒலிப்பதிவு செய்யப்பட்டது.

தற்போது படத்தின் நாயகி அனுபமா பரமேஸ்வரன் இந்தப்பாடலை தானே பாடி அந்த வீடியோவை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.. இதுபற்றி குறிப்பிட்டுள்ள அனுபமா, “நான் ஒன்றும் பிரபலமான பின்னணி பாடகி கிடையாது.. ஏதோ என்னால் முடிந்த அளவு உன்னிமாயா பாடலை முணுமுணுத்துள்ளேன்.. கேட்டுவிட்டு கிண்டல் செய்யாதீர்கள்.. இசையமைப்பாளரே என் டார்ச்சரை பொறுத்துக்கொள்ளுங்கள்” என கூறியுள்ளார்.

மூலக்கதை