ஆலியா பட் அணியும் மாஸ்க் விலை என்ன தெரியுமா?

தினமலர்  தினமலர்
ஆலியா பட் அணியும் மாஸ்க் விலை என்ன தெரியுமா?

திரை உலகைச் சேர்ந்தவர்கள் பயன்படுத்தும் பொருட்கள் எல்லாமே விலை உயர்ந்ததாகத் தான் இருக்கும் என்ற பிம்பம் ரசிகர்கள் மத்தியில் உள்ளது. ஆனால் அது உண்மையில்லை. சிலர் கோடிக்கணக்கான சொத்துக்களை வைத்துள்ள போதும் எளிமையாகத்தான் வாழ்ந்து வருகின்றனர்.

அதற்கு பிரபல பாலிவுட் நடிகை ஆலியா பட்டும் நல்ல உதாரணம். பாலிவுட்டில் முன்னணி நடிகையாக, கோடிக்கணக்கில் சம்பளம் பெறும் நடிகையாக இருந்தாலும், குறைந்த விலை மாஸ்க்கை அணிந்து ரசிகர்களை ஆச்சர்யத்தில் ஆழ்த்தியுள்ளார் ஆலியா.

சமீபத்தில் அவர் வெளியே வந்தபோது எளிமையான உடை, கையில் வாட்டர் பாட்டில் மற்றும் மாஸ்க், கிளவுஸ் அணிந்து இருந்தார். அவர் அணிந்திருந்த மாஸ்க் விலைதான் தற்போது நெட்டிசன்கள் மத்தியில் பேசுபொருளாகி உள்ளது.

எளிமை மற்றும் பாதுகாப்பை கணக்கில் கொண்டு மருத்துவர்கள் பரிந்துரை செய்துள்ள, அதே சமயம் எளியவர்களும் பயன்படுத்தும் வகையிலான விலையில் உள்ள மாஸ்க்கை ஆலியா பயன்படுத்தி வருவதாக ரசிகர்கள் அவரைப் பாராட்டி வருகின்றனர். அவர் பயன்படுத்தும் மாஸ்க்கின் விலை 300 ரூபாய் எனக் கூறப்படுகிறது.

மாஸ்க் அணிவது என்பது தங்களுடைய வசதியை வெளிக்காட்டுவதற்கோ அல்லது ஆடம்பரத்திற்காகவோ அல்ல. பாதுகாப்பு காரணத்துக்காகவே மாஸ்க் அணிகிறோம். இதை விடுத்து சிலர் தங்கம், வெள்ளி கொண்டு மாஸ்க் செய்து ஆடம்பரத்தை வெளிக் காட்டும் விதமாக நடப்பவர்கள் ஆல்யாவைப் பார்த்து கற்றுக் கொண்டால் நல்லது.

மூலக்கதை